பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
357


தனை முனையில் திடீரெனப் பாரந்தாக்கும் முறிவு ஏற்படாமல் தடுப்பதற்குப் பிளாஸ்டிக் அல்லது பிறபொருள்களுக்கு உள்ள திறன்

impacted tooth : (உட) தெற்றுப் பல் :

மற்றொரு பல்லுக்கு அடியில் வளரும் பல். இது மேல் நோக்கி வளர முடிவதில்லை

impact test : (பொறி) மோதல் விளைவுச் சோதனை : அதிர்ச்சியைத் தாங்குவதற்குப் பொருள்களுக்குள்ள திறனைச் சோதனை செய்தல்

impair : பதங்கெடுத்தல் : அளவிலோ தரத்திலோ குன்றச்செய்தல்

impedance : (மின்) மின்மறிப்பு : ஒரு மின் சுற்றுவழியில் மாற்று மின்னோட்டத்திற்கு ஏற்படும் புறத்தோற்றத் தடை. ஒரு மின்சுற்று வழியில் தடை. தூண்டு மற்றும் கொண்மை எதிர்வினைகள் ஆகியவற்றின் கூட்டு விளைவுகள் ஓர் அலகுகளில் கணக்கிடப்படும்

impedance matching : (மின்) மறிப்புப் பொருத்தீடு : மிக உயர்ந்த அளவு மின்விசை மாற்றத்தைப் பெறுவதற்காக இரு வேறுபட்ட மின்மறிப்புகள் பொருத்தப்படும் மாற்று மின்னோட்டப் புறத் தோற்றத்தடை

impeller : (தானி) தூண்டு தட்டம் : பல விசை விசிறி அலகுகளைக் கொண்ட ஒரு நீர் இறைப்பானிலுள்ள சுழல் உறுப்பு. இது தான் பயணம் செய்கிற ஊடகத்தினை இயங்கச் செய்கிறது

imperial : படவரைதாள்: சாதாரணத் தரமுடைய படம் வரைவதற்குரிய தாள். இது 76x5 செ.மீ. அளவுடையது. இதன் மேற்பரப்பு சொரசொரப்பர்கவோ. வழுவழுப்பாகவோ இருக்கும்

imperviousness : (க.க) துளைப்புத் தடைத்தன்மை : துளைப்புக்கு இடங்கொடாத தன்மை. இது சுவரில் செங்கல் பாவி, மென்ட் அல்லது சிமென்ட் காரை பூசுவதன் மூலம் பெறப்படுகிறது. இந்தச் செங்கற்கள் பாவும்போது நன்கு உலர்ந்திருக்க வேண்டும்

impetus : தூண்டு விசை :தூண்டு திறம், ஒரு பொருளை இயக்குவதற்கான செயல் தூண்டு விசை

impinge: மோதுதல் : இயக்கத்திற்குப் பின்பு ஒரு பொருளின்மீது வந்து மோதுதல் தாக்குதல்

imposing stone : (அச்சு) அச்சுக் கோப்புக் கல்:அச்சுக்கோக்கப்பட்ட உருக்களை இருப்புச் சட்டத்தில் வைத்துப் பொருத்தி அமைப்பதற்கான கல் அல்லது உலோகத் தளமுடைய மேசை

imposition : (அச்சு.) அச்சுப்பக்க உருவாக்கம்: அச்சுக்கோக்கப்பட்ட உருக்களை இரும்புச் சட்டத்தில் பக்கம் பக்கமாக வைத்துப் பொருத்தி அமைத்தல்

impost : (க.க.) தூண்தலை : மேல் வளைவைத் தாங்கும் தூணின் மேற்பகுதி

impregnated : வலுவேற்றிய: வெளிக் கதவுக்கான வெட்டுமரம் வாயுமண்டலத்தின் பாதிப்பினால் சிதைவுறாமலிருப்பதற்காக பல்வேறு நீர்மங்களைக் கொண்டு வலுவூட்டப்படும்

impressed voltage: (மின்.) தூண்டு மின்னழுத்தம்: ஒரு சாதனத்தில் மின்னழுத்தம்

impression: (அச்சு) அச்சுப் பதிவு: பக்கத்தில் அல்லது காகிதத்