பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

386

கவும் துண்டிக்கவும் பயன்படும் மின் விசை

knob : (மின்.) குமிழ் கைபிடி : (1) மின்கடத்திகளை அதனதன் நிலைகளில் பிடித்து வைத்துக் கொள் வதற்கான ஒரு பீங்கான் சாதனம் (2) ஒரு வகைக் கைப்பிடி

knob turning : குமிழ் கடைசல் : குமிழ் அல்லது உருண்டை வடிவக் கடைசல்

knock : (எந்.) இடிமானம் : உறுப்புகளைத் தளர்வாக பொருத்துவதன் விளைவாக உண்டாகும் அதிர்வு அல்லது இடிமானம்

knocked down : எந்திரப் பகுப்பு : எந்திரத்தின் உறுப்புதளை எளிதாக எடுத்துச் செல்வதற்காகத் தனித்தனியாகப் பிரித்தெடுத்தல்

knocking : (தானி.) உள்வெடிப் பொலி : (1) உந்து தண்டுகள் உந்து தண்டு இருசாணிகள், இணைப்புச் சலாதைகள், பிரதானத் தாங்கிகள் ஆகியவை தேய்வுறுவதால் அல்லது அவற்றைத் சீராகப் பொருத்தாதிருப்புதால் உண்டாகும் உள்வெடிப்பொலிகள் (2) நீள் உருளையிலுள்ள எரிபொருள் சீரற்ற நேரத்தகவின்மையால் உரிய நேரத்திற்கு முன்னதாகவே வெடிப்பதால் எஞ்சினுள் ஏற்படும் ஒலிகள் (3) சிலவகைக் கார்பன் வெடிப்பதால் அல்லது வெப்பத்தினால் எஞ்சினில் உண்டாகும் ஒலி

knot : (1) நெருகு : அடிமரத்தில் கிளை தோன்றுமிடத்தில் உண்டாகுப் கெட்டியான திரட்சி (2) கடல் கீட்டலகு : 1852 மீட்டர் நீளங்கொண்ட கடல் துறை நீட்டலளவை அலகு

knotting : (வண்.) நெருகு வண்ணம் : புடைப்புகள் வெளியில் தெரியாதபடி மறைப்பதற்கு வண்ணப் பூச்சாளர்கள் பயன்படுத்தும் ஒரு வகைக் கலவை. அவலரக்கு, சிவப்பு ஈயக்கலவை, வச்சிரப்பசை ஆகியவை இதற்குப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது

knuckle joint : (எந்.) முட்டி இணைப்பு : ஒரு சலாகையின் முனையிலுள்ள துளையில் மற்றொரு சலாகையின் கவர் முனையைப் பொருத்தி ஓர் இணைப்பு இரு சாணியால் இணைத்தல்

knurl : திருப்புக்குமிழ் : தட்டச்சுப் பொறியில் அச்செழுத்துத்தாள் தகட்டைத் திருப்பும் குமிழ்

koa : (மர.) கோவா மரம் : ஹவாய் தீவுகளில் மட்டும் காணப்படும் மரம். இதன் எடை ஒரு அடிக்கு 24 கிலோ இளம் பழுப்பு நிறமுடையது. குறுக்கே அலை அலையாகப் பட்டைகள் இருக்கும். அறைகலன்கள், இசைக் கருவிகள் தயாரிக்கப் பயன்படுகிறது

koko : (தாவ.) கோகோ மரம் : இதனைக்கிழக்கு இந்திய வாதுமை மரம் என்றும் கூறுவர். இது சொர சொரப்பான கரண் உடையது; கடினமானது; எளிதில் உடையக் கூடியது. ஒரு கன அடியின் எடை 24 கிலோ நிறமும், கரணும் கருத்த சீமை நூக்கு போன்றது. வானொலிப் பெட்டிகள் செய்யப் பயன்படுகிறது

kraft board : (தாள்.) மரக்கூழ் அட்டை : வெண்மையாக்கப்படாத சல்பேட் கூழ் அல்லது மரக்கூழ் கொண்டு தயாரித்த வலுவான் அட்டை

kraft paper : (தாள்.) முரட்டுக்காகிதம் : சிப்பங்கட்டுவதற்குப் பெருமளவில் பயன்படுத்தப்படும் வலுவான பழுப்புநிறக் காகிதம்