பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

400

liberation (விண்) விடுவிப்பு : சந்திரனின் உள்ளபடியான அல்லது வெளிப்படையான ஊசலாட்டம் குறிப்பாக, வெளிப்படையான ஊசலாட்டம்

lifespan : (விண்) ஆயுள் நீட்சி: ஒரு செயற்கைக் கோள் ஒரு சுற்றுப் பாதையை அடைவதறகும் அது பூமிக்குத் திரும்பவோ சிதை வுறவோ செய்வதற்குமிடையிலான கால நீட்சி

lift (வானூ) தூக்காற்றல்: விமானத்தைச் சமதளத்திற்கு மேலே உயர்த்துவதற்கான காற்றின் மொத்த ஆற்றல்

lifting magnet ; (மின்) தூக்கு காந்தம் : பாரந்தூக்கிப் பொறியின் கொக்கியினால் தூக்கிச் செல்லப்படும் ஒரு மின்காந்தம். பெரும் இரும்பு எஃகுக் கட்டிகளைத் தூக்குவதற்கு இது பயன்படுகிறது

liftoff : (விண்.) மேலுந்தல் : ஒரு விண்வெளி ஊர்தி செலுத்து மேடையிலிருந்து ராக்கெட் முற்செலுத்தத்தினால் வலைவீச்சு நெறியில் தொடக்கநிலையில் இயங்குதல்

ligature : (அச்சு) எழுத்து இணைப்புரு : அச்சில் fi fi போன்று இரு எழுத்தாக இணைத்து உருவாக்கப்பட்ட எழுத்துகள்

light : (அச்சு.) ஒளிப்புழை : ஒளி வருவதற்கான புழை வழி ;பல கணிக் கண்ணாடிப் பாளம்

light bridge : ஒளிமேடை: ஒளிக் கட்டுப்பாட்டுக் கருவிகளும், சில சமயம் விளக்குகளும் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் ஒரு மேடை

light cut : (பட்.) நுட்ப வெட்டுமானம் : உலோக வேலைப்பாடுகளில் குறுகலாகவும் நுண்ணியதாகவும் வெட்டி வேலைப்பாடு செய்தல்

light face : (அச்சு.) மென்முகப்பு: அச்சுக் கலையில் மென்மையான முகப்புடைய அச்செழுத்துகள்

light flare : (தொ.கா) வெண் புள்ளி : தொலைக்காட்சி படத்தில் மோசமான தள அல்லது குவி விளக்கு காரணமாக உண்டாகும் வெண் புள்ளிகள்

lightning rod (மின்) இடி தாங்கி : கட்டிடத்தின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ள கூர்மையான உலோகச் சூலிகை, இது தரையில் ஈரமண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும், இது இடியினால் உண்டாகும் சேதங்களைக் குறைக்கிறது

light level : ஒளி அளவு நிறை : ஒரு பொருளின் மீது அல்லது காட்சியின் செறிவளவு. இது மெழுகு விளக்கொளி அலகுகளில் அளவிடப்படும்

lightning arrester : (மின்) இடி தாங்கி : மின்னலை வாங்கிப் பூமியில் செலுத்தும் ஒரு சாதனம். இதனால் மின்னியல் எந்திரங்கள் காக்கப்படுகின்றன

light wave : (மின்) ஒளி அலை : கட்புலனாகிற ஒளியின அலை

ligne : லிக்னே : கடிகாரம் செய்பவர்கள் பயன்படுத்தும் ஓர் அள வீட்டு அலகு. இது 6 செ.மீ. அளவுக்குச் சமமானது

lignin: (மர.) லிக்னின் : மரத்தின் இழைகளை ஒன்றாக இணைத்து வைத்துக் கொள்கிற பொருள். இது மரத்திற்கு வலிமையும் நெகிழ் திறனும் அளிக்கிறது

lignite: ; பழுப்பு நிலக்கரி: பழுப்பு நிறமான, கெட்டியாகாத நிலக்கரி. இதில் பெருமளவு ஈரப்பதன் கலந்திருக்கும்

lignum vitae : புதர்ச் செடிமரம் : மத்திய அமெரிக்காவில் காணப்