பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

415

magnetic screen or shield : (மின்.) காந்தத் திரை அல்லது கேடயம் : இது உட்புழையான் இரும்புப் பெட்டி. இதன் மையப் பகுதி காந்த விசைக்கோடுகளின்றி அமைக்கப்பட்டிருக்கும்

magnetic switch : (மின்.) காந்த இணைப்பு விசை : மின்காந்தம் மூலம் இயக்கப்படும் அல்லது தட்டுப்படுத்தப்படும் ஓர் இணைப்பு விசை

magnetic whirl: (மின்.) காந்தச் சுழற்சி : மின்னோட்டம் பாயும் ஒவ்வொரு கம்பியைச் சுற்றிலும் ஒரு வடிவமான காந்தப்புலம் நீர்ச் சுழி அல்லது சுழல் போல் அமைந்திருக்கும். இதுவே காந்தச் சுழற்சி எனப்படும். இது தூண்டலற்ற சுருணையைக் குறிப்பதில்லை

magnetism : (மின்.) காந்த விசை : இரும்பு, எஃகு, வேறு பொருள்களுக்குள்ள ஒருவகை ஈர்ப்பு இயல்பு. இந்த இயல்பு காரணமாக, இவை குறிப்பிட்ட விதிகளுக்குட்பட்டு ஈர்ப்புவிசைகளையும் செலுத்துகின்றன

காந்தவியல் : காந்தவிசை பற்றிய விதிகளையும் நிலைகளையும் ஆராயும் அறிவியல் பிரிவு

magnetite : (கனி.) அயக்காந்தம் : (மாக்னட்டைட்) காந்த விசையுடைய இரும்புக் கனிமம் (Fe3O4)

magnetization : (மின்.) காந்த விசையூட்டுதல் : காந்தத்தின் இயல்புகளை ஏற்றல் அல்லது காந்தவிசையினை ஊட்டுதல்

magnetizing current : காந்த மூட்டு மின்னோட்டம் : ஒரு மின் மாற்றியில், மின்மாற்றிக் காப்புப் பெருக்கம் ஏற்படுத்தப் பயன்படுத்தப்படும் மின்னோட்டம்

magneto : (மின்.) தனிக் காந்த மின்னாக்கி : உள் வெப்பாலைப் பொறி முதலியவற்றில் தீக்கொளு ஆவதற்காகப் பயன்படுத்தப்படும் தனி நிலைக்காந்த மின்னாக்கிப் பொறி. இதில் மின்காந்தத் தூண்டுதல் மூலம் மின்விசை உற்பத்தி செய்வதற்காக நிலைக் காந்தங்களும் ஒரு மின்னகமும் அமைந்திருக்கும்

magneto - hydrodynamics : (விண்.) காந்த நீரியக்கவியல்: நீர்சார்ந்த இயக்க விசை பற்றிய, அல்லது நீர்மத்தின் அல்லது நீர்மத்தின் மீது தாக்கும் ஆற்றல் பற்றிய ஆய்வியல்

magnetometer : (மின்.) காந்தமானி : ஒரு காந்தப்புலத்தின் திசையினையும் விசையினையும் அளவிடப் பயன்படுத்தப்படும் கருவி

magneto motive force : (மின்.) காந்தவியக்க விசை : ஒரு முழுமையான காந்தச் சுற்று வழியின் நெடுகிலும் ஒருங்கிணைக்கப்பட்ட முழுமையான காந்தம் ஏற்றும் விசை

magnet steel : காந்த எஃகு : இது சாதாரணமாக, குரோமியமும் மக்னீசியமும் கலந்த உயர்தரன எரியும் மின்னிழைம எஃகினைக் குறிக்கும். இது நிலைக்காந்தங்களுக்குப் பயன்படுகிறது

magnetostriction: (மின்.) காந்த விளைவு : ஒரு காந்தப் புலத்தில் வைக்கப்படும் சில தனிமங்களின் பரிமாணத்தில் ஏற்படும் மாறுதல் விளைவு

magnet poles : (மின்.) காந்தத் துருவங்கள் : ஒரு காந்தத்தில் உள்ள மிக அதிக அளவு ஈர்ப்பாற்றல் புள்ளிகள். இவை வடதுருவங்கள், தென்துருவங்கள் எனப்படும்

magnet wire : (மின்.) காந்தக் கம்பி : மின்னகங்கள், புலச் சுருள்