பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

ஒரு காற்றோட்டித்தின் வேகத்தை அளவிடுவதற்குரிய ஒரு கருவி

arteroid altimeter : (வானூ.) நீர்மம் வழங்கா உயரமானி : அழுத்த வேறுபாடுகளைத் துல்லியமாகத் காட்டும் ஒரு மூலகத்தின் கோட்டத்தின் வாயிலாக உயரத்தை அளந்து காட்டும் உயரமானி

aneroid barometer : நீர்மம் வழங்கா பாரமானி : காற்று நீக்கப்பட்ட ஓர் உலோகப் பெட்டியின் நெகிழ் திறம்வாய்ந்த உச்சிமுனையின் அல்லது இடையீட்டுத் திரையின் அசைவுகளின் வாயிலாக வாயு மண்டலத்தின் அழுத்தத்தினைத் காட்டக்கூடிய சாதனம். கடல் மட்டத்திற்குமேல் உயரங்களைக் கண்டறிவதற்கும், வானிலை மாற்றங்களை முன்னறிவதற்கும் பயன்படும் கருவி

aneurism : (நோயி.) குருதிநாள அழற்சி : குருதி நாளத்தின் சுவர் வலுவிழந்து விடுவதால் குருதி நாளத்தில் ஏற்படும் அளவுக்கு மீறிய வீக்கம்

angina : (நோயி.) தொண்டை வீக்கம் : தொண்டையை நெறிப்பது போல் ஏற்படும் மூச்சுத் திணறல்

angina pectoris: (நோயி.) இடது மார்பு வலி : இதயத்திற்கு இரத்தம் வழங்கும் குருதி நாளம் குறுகலாவதன் காரணமாக இடது மார்பு வேதனை தரும் கடும் இதயவலி

angioma (நோயி.) குருதிக்கட்டி : இரத்த நாளங்களில் ஏற்படும் இரத்தக்கட்டு

angio spermaa : (தாவர.) மூடு விதைச் செடி : பெரும்பாலான பூக்குந் தாவரங்களைப் போன்று ஒரு விதைக் கூட்டினுள் விதைகள் முதிர்ச்சியடையும் தாவரங்கள்

angle (கணி.) கோணம் : இரு நேர்கோடுகளின் திசையிலுள்ள வேறுபாடு: ஒன்றையொன்று சந்திக்கும் இரு நேர்கோடுகளுக்கிடையிலான இடைவெளி. சுற்றுவட்ட இயக்கத்தை அல்லது சுழற்சியை அளவிடுவதற்குக் கோணங்கள் பயன்படுகிறது

angle bead: (க.க.) கோணமணி : இரண்டு சுவர்கள் செங்கோணங்களில் சந்திக்கும்போது ஏற்படும் ஒரு கோணத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வார்ப்படப் பட்டை

angle brace: (க.க.) கோண குறடு : ஒரு சட்டத்தின் மூலையில் துளையிடும் போது பயன்படுத்தப்படும் இடுக்கித் திருப்புளி

angle bracket: (க.க.) கோண ஏந்தற் பலகை : ஒன்றுக்கொன்று செங்கோணங்களிலுள்ள இரு முகங்களைக் கொண்ட ஒருவகை வளைவு தாங்கி, இதில் ஒரு வலையினைச் சேர்க்க, வலிமை மிகுதிப்படும்

angle dividers : (மர:வே.) கோணக் கவராயம் : கோணங்களை ஒத்த இரு பகுதிகளாகப் பிரிப்பதற்குப் பயன்படும் ஒரு கருவி. சில சமயம் மூலமட்டப் பலகையாகவும் பயன்படுத்தப்படுகிறது

angle of attack : (வானூ.) தாக்கு கோணம் : விமானதளத்தின் காற்றழுத்தத் தளத்தின் நாணுக்கும் அதன் இயக்கத்திசைக்குமிடையிலான கூர்ங்கோணம்

angle of compensation : (மின்.) சரியீட்டுக் கோணம் : வட்டாரக் காந்த ஆற்றலை ஈடுசெய்வதற்காக ஒரு திசையறி கருவியின் அளவீட்டில் பயன்படுத்தப்படும் ஒரு திருத்த கோணம்