பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
421

படுத்தித் திட்டமிடப்பட்ட பெரிய அளவில் பொருட்களை உற்பத்தி செய்தல்

mass spectrograph : (இயற்.) பொருண்மை வண்ணப்பட்டை ஒளிப் பதிவுக் கருவி : நேர்மின்னேற்றம் செய்யப்பட்ட துகள்களை அவற்றின் பொருண்மைகளுக்கேற்ப தனியாகப் பிரிக்கும் கருவி. படத்தில், அணுக்களின் அயனிகள் முதலில் 'E' என்ற தகடுகளுக்கிடையே செல்லும்போது, கற்றை கீழ் நோக்கி வளைகிறது. பின்னர் காகிதத்திற்கு செங்கோணத்திலுள்ள 'M' 'என்ற காந்தப்புலம் கற்றையை மேல்நோக்கி வளைக்கிறது. இவ்வாறாக ஒரே பொருண்மையான துகள்கள் அனைத்தும் ஒளிப்படத் தகட்டிலிருக்கும் 'μ' என்ற புள்ளிக்கு வருகின்றன. வேறு பொருண்மையுள்ள துகள்கள் மற்றப் புள்ளிகளுக்கு வருகின்றன. பொருண்மை ஊடகம் மூலம் இந்தத் துகள்களைப் பார்க்கலாம்

mass-velocity relation: (இயற்.) பொருண்மை - விரைவு வீதத் தொடர்பு : ஒரு பொருள் வேகமாக இயங்கும்போது, அதன் பொருண்மையானது, ஒளியின் வேகத்தில் பொருண்மை அளவிட முடியாத அளவுக்கு மிக உயர்ந்திருக்கும் வரையில் அதிகரிக்கிறது

master cylinder : (தானி.) தலைமை நீள் உருளை: உந்து தண்டு உடைய பாய்மரப் பொருளடங்கிய நீள் உருளை. இதன் மூலம் கால் மிதியை அழுத்தித் தடுப்பு செய்யப்படுகிறது

master gauge : தலைமை அளவி: அன்றாடம் பயன்படும் அளவிகளின் துல்லியத்தை அல்வப்போது சோதனை செய்து பார்ப்பதற்குப் பயன்படும் அளவி

master keyed: (பட்.) ஆணித்திறவு: பல பூட்டுகளைத் திறக்கவல்ல திறவுகோல்

master switch : (மின்.) தலைமை விசை : ஒரு பிரதான மின்விசை. இதன்மூலம் மற்ற விசைகளின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்

master taper : (எந்.) தலைமை அளவை வார் : செந்நிறமான அளவை வார். இதன் மூலம் உட்புறம் அல்லது வெளிப்புறம் மற்ற அளவை வார்கள் அளவிடப்படுகின்றன

master workman : தலைமைத் திறனாளர் : சாதாரண அளவை விட அதிகத் தேர்ச்சித் திறன் வாய்ந்த தொழிலாளர். 'தலைமைப் பொறிவினைஞர்' என்பது பட்டறை மேன்முனையாளையும் கண்காணிப்பாளர்களையும் குறிக்கும்

msstic : பூனைக்கண் குங்கிலியம் (கல் புகைக்கீல்) : நிலக்கீலினால் இயற்கையாகப் பூரிதமடைந்த மணற் பாறை. தளம் பாவுவதற்கு மிகவும் உகந்தது

mat : (குழை.) பாய் : குழைமவியலில் நெசவு செய்யப்படாத இழைக் கண்ணாடி இழைகளாலானது. இது படலமாக இருக்கும். சில பொருட்கள் முன்னுருவாக்க வடிவங்களிலும் அமைந்திருக்கும்

mat board : பாய் அட்டை : படச் சட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் கனமான காகித அட்டை

matched boards : (மர.வே.) ஒட்டிணைப் பலகை : ஒன்றுடன் ஒன்று பொருந்தும்படி குவடு குழிவுகளுடன் கூடிய பலகை வரிச்சல்

matched metal moulding : (குழை.) ஒட்டினை உலோக வார்ப் படம் : இரு உலோக வார்ப்படங்