பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

431

milling machine: (பட்.) துளையிடு எந்திரம் :உலோகத் தகட்டில் வடு வரிசைத் துளைகள் இடுவதற்கான எந்திரம்

milling machine universal : (பட்.) பொதுத் துளையிடு எந்திரம் : எல்லாவகையான பரப்புகளையும் கொண்ட உலோகத் தகடுகளிலும் துளையிடுவதற்கான எந்திரம்

milling machine vertical : (பட்.) செங்குத்துத் துளையிடு எங்திரம் : துளையிடுவதற்குச் செங்குத்தான கதிர் கொண்ட எந்திரம். இது இடைமட்ட எந்திரத்திலிருந்து வேறுபட்டது

millivolt : (மின்.) மிலிவோல்ட் : ஒர் பகுதி. 0.001" வோல்ட்

millwright: ஆலை அமைப்பாளர்: ஒர் ஆலையில் அல்லது பட்டறையில் எந்திரங்களைத் திட்டமிட்டு அமைப்பவர்

mimeograph : படியெடுப்பான்: கையெழுத்து அல்லது தட்டெழுத்துப் படியின் பல படிகளை எடுப்பதற்கான தகடு ஆக்க அமைவு

minaret : (க.க.) தூபி : பள்ளி of வாயில் தூபி

mineralogy : கனிமியியல் : கனிமங்களின் பண்பியல்புகள், வகைப்பாடு முதலியவை பற்றி ஆராயும் அறிவியல்

miners safety lamp : சுரங்கக் காப்பு விளக்கு : பார்க்க டேவி காப்பு விளக்கு

minimum : குறுமம் : மிகக் குறைந்த அளவு; மிகக் குறைந்த எல்லை

minimum flying speed: (வானூ.) குறும பறக்கும் வேகம் : ஒரு விமானம் தனது இறகுகளின் இடைய கல் அளவுக்கு அதிகமான உயரத்தில் பறக்கும் மட்டத்தில் ஒரே சீராகப் பேணக்கூடிய மிகக் குறைந்த அளவு வேகம்

minimum gliding angle : (வானூ.) குறுமச் சறுக்குக் கோணம்: விமானத்தின் முற்செலுத்தி அழுத்தம் கொடுக்காதிருக்கும் போது, விமானத்தின் கிடைமட்டப் பாதைக்கும், ஏறத்தாழ அதன் கிடைமட்டப் பாதைக்குமிடையிலான கூர்ங்கோணம்

minimum speed : (வானூ.) குறும வேகம்: விமானத்தில் எந்தக் குறைந்த அளவு வேகத்தில் ஒரே சீராகப் பறக்க முடியுமோ அந்தக் குறைந்த அளவு வேகம்

mining : சுரங்கத் தொழில் : பூமியிலிருந்து உலோகம், கணிப் பொருட்கள் ஆகியவற்றை அகழ்ந்தெடுத்தல்

mining engineer: சுரங்கப் பொறியாளர் : சுரங்கங்களைத் தோண்டி அவற்றிலிருந்து உலோகத் தாதுப் பொருள்களை அகழ்ந்தெடுக்கும் பணிகளைச் செய்யும் பொறியாளர்

minion : (அச்சு.) குறும அச்செழுத்து : மிகச்சிறிய அளவு அச்செழுத்து. இது 7 புள்ளி அளவுக்குச் சமமானது. அச்செழுத்தில் புள்ளி முறை பயனுக்கு வருவதற்கு முன்பு இப்பெயர் வழங்கியது

minor axis : சிறுபடி அச்சு : ஒரு நீள் வட்டத்தின் குறுகிய விட்டம்