பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
443

கத்தை விட அதிக வேக இயக்கத்தைப் பெறலாம்

multiplex : பன்முகச் செய்தி யனுப்பீடு : வானொலி, தொலைபேசிச் செய்தித் தொடர்புகளில் ஒரே செய்தியனுப்புப் பாதையில் ஒரே திசையில் அல்லது இருதிசை களிலும் பல்வேறு செய்திகளை அனுப்புவதற்கான முறை

multipliar : (மின்.) விசைப் பெருக்கி : மின்விசை ஆற்றலளவைப் பன்மடியாகப் பெருக்குவதற்குரிய சாதனம்

multipolar motor : (மின்) பல் துருவ மின்னோடி: நான்கு அல்லது அவற்றுக்கு புலக்காந்தத் துருவங்களையுடைய ஒரு மின்னோடி

multispeed motor : (மின்.) பன் முகவேக மின்னோடி : எவ்வளவு பாரமிருந்தாலும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு வேகங்களில் இயங்கவல்ல ஒரு மின்னோடி

mumps : (நோயி..) புட்டாளம்மை: ஒருவகை நோய்க் கிருமியினால் உண்டாகும் தொற்று நோய்.இது: எச்சில் சுரப்பிகளில் வீக்கத்தை ஏற் படுத்துகிறது

muntz metal: (உலோ ) மண்ட்ஸ் உலோகம் : 60-62 பகுதி செம்பும் 38-40 பகுதி துத்தநாகமும் கலந்த உலோகக் கலவை, இது கப்பற் கவசத் தட்டுகள் செய்யப் பயன்படுகிறது

muriatic acid : (வேதி) நீரகப் பாசிகை அமிலம் : ஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் (HCL) வாணிகப் பெயர்

mushet stael : (உலோ.) முஷட் எஃகு: 9% டங்ஸ்டன், 2.5% மாங் கனிஸ், 1.85% கார்பன் கொண்ட எஃகு. இது வெட்டுக் கருவிகள் செய்வதற்கு முக்கியமாகப் பயன்படுகிறது

muslin : மென்துகில் (மஸ்லின்) : பெண்டிர் உடைகளுக்கும், திரை களுக்கும் உதவும் நுண்ணய முடைய பருத்தியாலான மென்துகில்

mutation :வகை மாற்றம் : பெற் றோர்களின் பண்புகளிலிருந்து மாறுபட்டு புதிய பண்புகளுடன் தாவரம் அல்லது விலங்கு இனம் தோன்றுதல். இந்த மாற்றம் வ்ழித்தோன்றல் களுக்குச் சேர்ந்தடைகிறது. வன்கமாற்றங்கள் சில சமயம் ஊடுகதிர்களினால் (எக்ஸ்கதிர்கள்) உண்டாகிறது. அண்டக் கதிர்களினாலும் இது உண்டாகலாம்

mutual Inductance: ; (மின்.) பிறிதின் தூண்டல் : ஒரு சுருணை யின் காந்தப்புலம், இன்னொரு சுருணையின் மீது செயற்படுவதன் மூலம் உண்டாகும் விளைவு.ஒரு மின் சுற்று வழியில் ஏற்படும் மின்னோட்ட மாறுதலின் இன்னொரு மின் சுற்று வழியில் உண்டாகும் மின்தூண்டல்

mutule : (க.க ) பிதுக்கற் கவரணை : டோரிக் என்னும் கிரேக்கக்கலவைப் பாணியின்படி தூணின் மேல் வரம்பிலுள்ள பிதுக்கக் கவரணை

myriapods : (உயி.) பலகாலிகள்: அட்டை, பூரான் போன்ற கணக்கற்ற கால்கள் உடைய உயிரினங்கள்

myrtle : புன்னை : இதனைக் கலி போர்னியர்ப் புன்னை என்றும் கூறுவர். இதன் மரம் கடினமானது; வலுவானது பசு மஞசள் நிறமுடையது. இந்தப் பசுமை மாறாத தன்மையுடைய இது பல நோக்க மரம், அமெரிக்காவின் மேற்குக் கரையில் இது மிகுதியாக வளர்கிறது