பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

452

notching machine: வடுவெட்டுக் கருவி : உலோகத் தகடுகளில் வடுத்தடங்களை வெட்டவும், விளிம்புகளை மட்டப்படுத்தவும் பயன்படும் கருவி

novolak : (வேதி.குழை.) நோ வோலக்: நிரந்தரமாக உருகி இளகக் கூடியதும், கரையத் தக்கது மான ஃபினோ லால்டிஹைட் பிசின். பினாலின் ஒரு மூலக்கூறுடன், ஃபார்மாடிஹைடின் ஒன்றுக்குக் குறைவான மூலக் கூற்றுடனும், ஓர் அமில வினையூக்கியுடனும் வினைபுரிவதன்மூலம் கிடைக்கும் விளைபொருள் இது

nozzle : (எந்.பொறி.) கூம்பலகு : நீள் குழாயின் குழாய் முனை போன்ற கூம்பலகு.

nuclear energy : (இயற்) அணு ஆற்றல்: அணுவியல் வினையில் வெளிப்படும் ஆற்றல்

nuclear turbo-jet : (வானூ.) அணுவியல் விசையாழி: விசையாழியின் வழியாக வரும் காற்றினைச் சூடாக்குவதற்காக, உள்ளெரி அறைக்குப் பதிலாக, ஓர் அணு உலையைக் கொண்டிருக்கிற விசை யாழி

nucleus : (வேதி.) மையக்கரு : அணுவின் உள்மையத்தில் செறிந் துள்ள அணுக்திரள். இதில் நியூட்ரான்களும் புரோட்டான்களும் செறிந்து சேர்ந்திருக்கும்

number drills (உலோ.வே.) எண்ணிட்ட துரப்பணம் : 1 முதல் 80 வரையில் எண்ணிடப்பட்ட சிறிய துரப்பணங்கள். இவற்றின் விட்டம் ஓர் அங்குலத்தின் ஆயிரங்களின் பகுதியாகக் குறிக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக 1 ஆம் எண் துரப்பணத்தின் விட்டம் 0.228"; 80 ஆம் எண் துரப்பணத் தின் விட்டம் 0.0135"

numbering machine : இலக்கமிடும் எந்திரம் : காசோலைகள், அனுமதிச் சீட்டுகள் முதலியவற்றில் தொடர்ச்சியாக இலக்கங்களை முத்திரையிடும் எந்திரம் அல்லது சாதனம்

numerals: (அச்சு) எண்குறி: எண்குறித்த இலக்கத் தொகுதி. பெருவழக்காகப் பயன்படுவது 1,2,3,4,5,6,7,8,9.0 என்ற அராபிய எண் குறிகள். ரோமானிய எண்கள் : I(1), v (5). L(50), C (100). D (500). M (1000)

numerator : (1)பின்ன மேல் இலக்கம் : பின்னத்தில் மேல் இலக்கத் தின் பகுதிகளைக் குறிக்கும் (2) எண்ணுபவர்

numismatics : நாணயவியல் : நாணயம், பதக்கம் ஆகியவற்றை ஆராய்ந்து வரலாற்றைக் கணிக்கும் அறிவியல்

nut :(எந்.) திருகாணி: சதுரமான அல்லது அறுகோண வடிவமுடையதும், உலோகத்தில் அல் லது வேறு பொருளினாலானதுமான ஒரு சிறிய துண்டு. இதன் உள்புறத்தில் மரையாணியை ஏற்பு தற்கான திருகிழைகள் அமைந்திருக்கும்

nut arbor or nut mandrel: (எந்.) ஆதார ஆச்சு : திருகாணிகளை வடிவமைப்பதற்குப் பயன்படும் சுழலும் முதன்மை ஆதார அச்சு

nut machine : (பட்.) திருகாணிப் பொறி : ஓர் உலோகப் பட்டையிலிருந்து அல்லது உலோகத் தண்டிலிருந்து திருகாணிகளைத் தயாரிப்பதற்கு வெட்டவும், துளையிடவும், தட்டி விடவும் பயன் படும் ஓர் எந்திரம்

nut shanks : (பட்) திருகாணித் துண்டு : பெரிய மரக்கைப் பிடிகளுடன் பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்பட்ட திருகாணித்தண்டு அல்லது துண்டு