பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

456

office automation: . (தானி.) அலுவலகத் தானியக்கம்: அலுவலகத்தின் தகவல்களைக் கையாள்தல், கணக்கிடுதல், விலைப்பட்டி தயாரித்தல் போன்ற பணிகளைத் தானாகவே செய்யக்கூடிய தானியங்கி எந்திரங்கள்

offset: (க.க) (1) உட்சாய்வு ; சுவரில் திட்பக் குறைவு உண்டு பண்ணும் பக்க உட்சாய்வு

(2) மாற்றுக்கறைப் படிவு: அழுத்தப்பட்ட தொய்வக உருளைமீது மை தடவி எதிர்ப்படியாக எடுக்கப்படும் கல்லச்சு முறை

offset paper, மாற்று அச்சுத்தாள்: மாற்றுக் கல்லச்சு முறைக்குப் பொருத்தமான பண்பியல்புகளுள்ள தாள்

offset printing: மாற்று அச்சு முறை: அச்சுப்படிவத்திலிருந்து அச்சுமை நேரடியாகத் தாளுக்குச் செல்லாமல், ஒரு ரப்பர் பரப்பில் முதலில் பதிந்து, பின்னர் எதிர்ப்படியாகத் தாளில் பதியும் அச்சு முறை

ogee: (க.க.) இரட்டை வளைவு: பாம்பு வடிவான அல்லது "S" வடிவான இரட்டை வளைவு

ogive; கூர்முனை வளைவு: வளைவுக் கூடத்தின் கூர்முனை வளைவு

ohm: (மின்.) ஓம்: மின்தடை அலகு

Ohm, George Simon (1787-1854): (மின்.) ஓம் ஜார்ஜ் சைமன்: ஜெர்மன் விஞ்ஞானி, மின்னழுத்தம் (ஓல்ட்டேஜ்) மின்னோட்ட அலகு (ஆம்பியரேஜ்), மின் தடை ஆகியவற்றுக் கிடையிலான தொடர்பினைக் கண்டுபிடித்தவர். இந்தத் தொடர்பு இப்போது ஓம் விதி என அழைக்கப்படுகிறது. இவர் முனீக் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்

ohmic heating: (உலோ) மின் தடை வெப்பமூட்டல்: உலோகத்தின் தடையை மீறி உலோகத்தின் வழியே மின்னோட்டம் செலுத்தி உலோகத்தைச் சூடாக்குதல்

ohm meter: (மின்) ஓம் மானி: மின்தடையின் அளவினை ஓம்களில் நேரடியாகக் குறித்துக் காட்டும் ஒருவகை மின்னோட்டமானி

ohm resistance: (மின்) ஓம் தடை: ஒரு மின்சுற்று வழியில் (நேர் மின்னோட்டம்) ஓர் ஆம்பியர் மின்னொட்டத்தை ஓர் ஒல்ட் மின்னழுத்தம் உண்டாக்கும்போது அந்த மின்சுற்று ஓர் ஓம் தடையை உடையதாகக் கருதப்படும்

ohm's law: (மின்) ஓம் விதி : "ஒரு மின்னோட்டத்தில் பாயும் மின்னோட்டம், அதிலுள்ள தடையின் அல்லது எதிர்ப்பின் விகித அளவில் இருக்கும்" என்னும் விதி. இந்த விதி பெரும்பாலும் கணிதத்தில் பயன்படுத்தப்படுகிறது

oil: (வேதி.) எண்ணெய்: விலங்குகள், தாவரங்கள், கனிமங்களிலிருந்து கிடைக்கும் எண்ணெய்ப் பொருள். இது மசகுப் பொருளாகப் பயன்படுத்தப்படுவதுடன் தொழில்களிலும் மிகுதியாகப் பயன்படுகிறது

oil capacitor. (மின்) எண்ணெய் மின் உறைகலம்: எண்ணெய்ச்