பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
44

ankylourethria : (உட) சிறுநீர் வடிகுழாய் அடைப்பு அல்லது சிறுநீர் வடிகுழாய் குறுகியிருப்பது

anneal : (உலோ.) கடும்பதமாக்கல் : கண்ணாடி, உலோகங்கள் முதலியவற்றைக் கட்டுப்படுத்தி ஆறவைத்தல் மூலமோ நன்கு சூடாக்கி மெல்ல ஆறவிடுவதன் மூலமோ கடும்பதப்படுத்துதல்

annealed tubing : (உலோ) பதப்படுத்திய குழாய் அமைப்பு : உலோகக் குழாய்கள், பகுதி பதப்படுத்தியும் வாணிக முறையில் வழங்கப்படுகின்றன. இந்தக் குழாய்களை வளைக்க வேண்டியிருக்கும் போது, முற்றிலும் பதப்படுத்திய குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன

annealing : (உலோ) பதனாற்றல்: கண்ணாடி, உலோகங்கள் முதலியவற்றைக் கட்டுப்படுத்தி ஆற வைப்பதன் மூலமாகவோ, மென்மையாக்கி உடையாதபடி பதப்படுத்துதல்

annual ring : (தாவர) ஆண்டு வளைய வரை :வெட்டு மரத்தில் மரத்தின் ஆண்டு வளர்ச்சியைக் குறிக்கும் வளைய வரை

annelida : (உயி..) வளையக்கணு உடலி : மண்புழுக்கள் போன்று, வளையங்களாலான உடல்களைக் கொண்ட பிராணிகள்

annular ball bearing : (எந்) வளையக் குண்டு வாங்கி: ஒரு வளையம் போன்ற பிடிப்பானில் குண்டுகளைத் தாங்கியுள்ள ஒரு தாங்கி

annulareclipse : (இயற்) வளையக் கிரகணம்:சூரியனைச் சந்திரன் முழுவதுமாக மறைக்காமல் சந்திரனைச் சுற்றி ஓர் ஒளிவளையம் மட்டுமே தெரியும் கிரகணம்

annular vault : (க.க) வளையக் கவிகை மாடம் : உருளை வடிவக் கவிகை மாடம் போன்று இணையான இரு சுவர்களை ஆதாரமாகக் கொண்டு எழுகின்ற ஒரு கவிகை மாடம்

annular wheel : (பல்) வளையச் சக்கரம்: இது ஒரு வளையப் பல்லிணை, இதன் பற்கள் அதன் உட்புறப் பரிதியுடன் பிணைக்கப்பட்டி ருக்கும். இதனை உட்புறப் பல்லிணை என்றும் கூறுவர்

annulated columns : (க.க) வளையமிட்ட தூண்கள் : வளையங்களால் அல்லது இணைப்புத் தகடுகளால் ஒன்றாகப் பிணைக்கப் பட்ட தூண் வரிசைக் கட்டமைவு

annulat : (க.க.) குறுவளையம் : மற்றவற்றைப் பிரிப்பதற்குப் பயன்படும் ஒரு சதுரவடிவ வார்ப்படம்

annulus: (உயி..) வளை வடிவ அமைப்பு:குறிமறையினத் தாவரத்தில் சிதல் உறைவிரிய உதவும் வளைய வடிவமான உயிர்மத் தொகுதி, ஒரே மையத்தைக் கொண்ட இரு வளையங்களுக்கிடையேயான இடைவெளி

annunciator: (மின்) ஏவல் மணிப் பொறி : ஒளி, ஒலி வாயிலாகப் பணிநாடிய இடம் சுட்டிக்காட்டுவதற்கான ஏவல் மணியின் பொறி அமைப்பு

annuuciator wire: (மின்) ஏவல் மணிப்பொறிக் கம்பி : மென்மையான செப்புக் கம்பி. இதில் இரு அடுக்குப் பஞ்சு நூல் எதிர்த் திசைகளில் சுற்றப்பட்டு, மென்மெழுகு பூசப்பட்டிருக்கும்

anode : (மின்.) நேர் மின்வாய் : எதிர்மின் வாய்க்கு எதிரானது