பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
471

நமது உடல் கால்சியத்தையும் பாஸ்ஃபரசையும் பயன் படுத்திக் கொள்வதைக் கட்டுப்படுத்துகிறது. உடல் அளவுக்கு அதிகமாக வேலை செய்வதால் உடம்பில் கால்சியம் குறைகிறது; இரத்தத்தில் கால்சியம் அதிகமாகிறது; இரத்தத்தில் பாஸ்ஃபரஸ் குறைகிறது

paratyphoid fever : (நோயி .) போலி குடற்காய்ச்சல் : குடற்காய்ச்சல் போன்ற ஒரு நோய்; ஆனால் அதைவிடக் கடுமை சற்று குறைவானது; இது 3 வாரங்கள் வரை நீடிக்கும்

parchment: வரைதோல் தாள்: எழுதுவதற்காக விலங்குத் தோல் போல் பாடம் செய்யப்ப்ட்ட காகிதம். காகிதத்தை வலுக்குறைந்த கந்தக அமிலக் கரைசலில் நனைத்து கெட்டித் தன்மையுடையதாகவும், நீர் புகாதவாறும் செய்யப் படுகிறது. இக்காகிதம் பளபளப்பாகவும், ஒளி ஊடுருவக்கூடிதாகவும் இருக்கும்

pargeting:(சு.சு.) : சுண்ணாசாந்து:சுவர்ப்பூச்சுச் சிற்ப ஒப்பனை வேலைப்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் அலங்காரக் காரை

paring chisel: (மர.வே.) செப்பனிடு உளி: சீவிச் செப்பனிடலும், தறித்து ஒழுங்குபடுத்தவும்,விளிம்பு வெட்டவும் ஓரம் நறுக்கவும் பயன்படும் ஒரு நீண்ட உளி

paris green: (வேதி.) பாரிஸ் வண்ணம்: (CuHAsO3) பூச்சிகொல்லியாகவும் வண்ணப்பொருளாகவும் பயன்படும் தாமிர ஆர்சனைட் என்ற நச்சு வேதியியற் பொருள்

parquetry. (க.க.) மரக்கட்டை எழில் விரிப்பு :தளங்களில் மரக் கட்டையினால் எழிற்பரப்பு: அமைத்தல்

particle: துகள்: சிறுதுண்டு அணுக்கூறு

parting: (வார்.) வகிடு: ஒரு வார்ப்படத்தின் இரு பகுதிகளைப் பிரிக்கும் இணைப்பு அல்லது பரப்பு

partition : (க.க.) தடுப்புச் சுவர்: ஒரு கட்டிடத்தைப் பல அறைகளாகப் பகுப்பதற்குக் கட்டப்படும் நிரந்தரமான உள்சுவர். வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும், அலுவலகக் கட்டிடங்களிலும் பல்வேறு கட்டுமானப் பொருள்களினால் வசதிக் கேற்பத் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்படுகின்றன

party wall : (சு.சு.) இடைச்சுவர்: கட்டிடங்களுக்குப் பொதுவுரிமையாக வழங்கப்படும் இடைச்சுவர்

Pascal's law (இயற்.) பாஸ்கல் விதி: "ஒரு திரவத்தின் ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் செலுத்தப்படும் அழுத்தமானது, அந்தத் கொள்கலத்தின் அதே அளவுப் பகுதி ஒவ்வொன்றுக்கும் சற்றும் குன்றயாமல் செலுத்தப்படுகிறது என்பது பாஸ்கல் விதி

passive : (விண்.) செயப்பாடு : ஒரு சைகையை அனுப்பீடு செய்யாமல் பிரதிபலித்தல்

pasteboard : தாள் அட்டை : இன்று நடுத்தர அளவு கனமுடைய கெட்டியான அட்டை எதனையும் இது குறிப்பிடுகிறது. முன்னர் பல தகட்டுத் தாள்களை அடுக்கி ஒட்டிய அட்டையை குறிக்கப் பயன்படுத்தப்பட்டது

pasted plate. (மின்.) ஒட்டுத்தகடு: மலிவான ஈயச்சேம மின்கலங்களில் பயன்படுத்தப்படும் ஒரு வதைத் தகடு. ஈயம், ஆன்டிமண் இவற்றினாலான ஒரு வலை சிறு இடை வெளிகளில் செருகப்படுகிறது. ஒரு வேதியியல் கூட்டுப் பொருள் உண்டாகி, சிறிது நேரத்தில் பயன்படுத் தப்படும் வேதியியற் பொருளைப் பொறுத்து நேர்மின் தகடாகவோ