பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
475

பான ஊர்தி மதிப்பளவிலிருந்து, அலைமாற்றம் காரணமாக மிக உயர்ந்த அளவுக்கு ஏற்படும் கோட்டம். இது சதவீத அளவில் குறிக்கப்படுகிறது

percentage of ripple: (மின்.) அதிர்வலை வீதம்: சராசரி வெளிப் பாட்டு மின்னழுத்த மதிப்பளவில் அதிர்வலை மின்னழுத்தத்தின் பயன் மதிப்பளவின் வீத அளவு, இது சதவீதத்தில் குறிக்கப்படுகிறது

perch: அளவுகோல்: கல் வேலைப்பாட்டில் மாற்றமுறு அளவு. இது சுமார் 25 கன அடி அளவுடையது

perfecting press: (அச்சு.) இரு பக்க அச்சுப்பொறி; காகிதத்தின் இரு புறங்களிலும் ஒரே சம்யத்தில் அச்சிடக்கூடிய வகையில் இரு அச்சுப் பதிவு நீள் உருளைகளையுடைய அச்சு எந்திரம்

perforating: (அச்சு.) துளையிடல்: தாளில் முத்திரைகளுக்கான சூழ்வரிசைத் துளையிடுதல்; கிழிப்பதற்கு வசதியான துளை வரிசை

perforating machine: (அச்சு.) துளையிடு கருவி: தாளைக் கிழிப்பதற்கு வசதியாகத் தாளில் துளையிடுவதற்குப் பயன்படும் ஒரு கருவி

perforating rule; (அச்சு.) துளையிடு உருளை: ஒரே இயக்கத்தில் அச்சடித்தல், துளையிடுதல் ஆகிய இரு பணிகளையும் செய்யக்கூடிய அச்சு உருளை

performance-type glider (வானூ.) செயல்திறன் சறுக்கு விமானம்: மிக உயர்ந்த அளவு செயல்திறன் வாய்ந்த ஒரு சறுக்கு விமானம்

perigynous: (தாவ.) சூலகப் பூவிழை: கருவகத்தை அல்லது சூலகத்தைச் சுற்றிலும் பூவிழைகளையுடைய தாவரம்

perimeter: சுற்றளவு: வட்டமான சுற்றுவரை உருவின் நீளம்

periodical: (அச்சு.) பருவ இதழ்: ஒழுங்கான கால, இண்டவெளிகளில் வெளியாகும் பத்திரிகை அல்லது இதழ்

periodic arrangement: (வேதி.) எண்மானப் பட்டியல்: ஒத்த வேதியியற் பண்புகள் ஒரே ஒழுங்காகத் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்ட தனிமங்களின் அணு எண் படியான வரிசைப் பட்டியல்

periodic systems (வேதி.) அணு எண்வாரிப் பட்டியல்: ஒத்த வேதியியல் பண்புகள் ஒரே ஒழுங்காகத் திட்டவட்டமாக வரையறுக்கப் பட்ட தொகுதிகளில் சேருகின்ற தனிமங்களின் அணு எண் வாரியான பட்டியல். இந்தத் தனிமங்கள், ஒத்த தனிமங்கள் ஒரே நேர் வரிசையில் வருமாறு குறுக்கு வரி சைகளில் அமைக்கப்ப்டுகின்றன. தனிமம் எந்த வரிசையில் உள்ளது என்பதைப் பார்த்து அது எந்த வகையான தனிமம் என்பதைக் கண்டு கொள்ளலாம்

peripheral speed: (எந்.) பரிதி வேகம்: ஒரு சக்கரம். அல்லது சுழல்தண்டு போன்ற உறுப்புகள் வட்டப்பரப்பின் சுற்றுக் கோட்டில் ஒரு நிமிடத்திற்குச் சுழலும் சுழற்சிகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடும் வேகம்

periphery: ( கணி.) பரிதி: வட்டம் நீள்வட்டம் போன்ற உருவங்களின் வட்டப்பரப்பின் சுற்றுக் கோடு

periscope: புறக்காட்சிக் கருவி: நீர்மூழ்கிக் கப்பலின் முகட்டுமேற்