பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
477

காரணம். இதனாலேயே, திரைப் படச்சுருளில் எடுக்கப்படும் வெவ்வேறு படங்கள் தொடர்ச்சியான ஒரே படமாக நம்க்குத் தோன்றுகிறது

personal equation ; திருத்தச் சமன்பாடு :கருவிகாட்டும் கணக் கெடுப்பவர் அந்தக் கணக்கினைச் சரியாக எடுக்கும் பாங்கற்றவராக இருப்பதன் காரணமாக, அக்கணக்கில் செய்ய வேண்டிய திருத்தம்

perspective ; பரப்புத் தோற்றம் : ஒரு சமதளப் பரப்பில் உள்ள பொருட்கள் கண்ணுக்குத் தோன்றுகிற அதே தோற்றத்தில் காட்சிப் படங்களை வரைந்து காட்டுதல்

persuader : நெம்பு கருவி :கணமான பொருட்களைக் கையால் நகர்த்துவதற்கு உதவக் கூடிய கடப்பாறை, நெம்பு கோல் போன்ற கருவிகள்

pestle : சிறு உலக்கை : உரலில்

பொருட்களை இடிப்பதற்குப் பயன்படும் கருவி

petcock: அடைப்புக்குமிழ்: நீராவி முதலியவற்றை வெளியிடுவதற்கான சிறு அடைப்பிதழ்

petrochemicals : பெட்ரோலிய வேதியியல் பொருட்கள் : பெட்ரோலியத்திலுள்ள மூலப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் வேதியியல் பொருட்கள்

petrography : (வேதி) கற்பாறையியல் : கற்பாறைகளின் அமைப்பு, உருவாக்கம் முதலியவற்றை ஆராய்ந்தறிதல்

petrol : கல்லெண்ணேய் - (பெட்ரோல்) : பொறி வண்டிகளுக்கும், விமானம் முதலியவற்றுக்கும் பயன்படும் தூய்மையாக்கப்பட்ட நில எண்ணெய். அமெரிக்காவில் இதனை 'கேசோலின்' என்பர்

petroleum : (வேதி) பெட்ரோலியம் : உள் வெப்பாலைகளிலும் பிறபொறிகளிலும் எரிபொருளாகப் பயன்படும் நிலப்படுகைக்குரிய தாது எண்ணெய்

pew (க.க.) சூழிருக்கை : திருக் கோயில்களிலுள்ள குடும்பத்தினருக்குக்கான சூழிருகைத் தொகுதி

pewter : ( உலோ.) பீயூட்டர் : வெள்ளியமும் காரீயமும் கலந்த சாம்பல் நிற உலோகக் கலவை

phaeton: (தானி.) திறப்புவண்டி: இரட்டைக் குதிரை திறப்பு. இதில் மடக்கக்கூடிய காற்றுத் தடுப்பும் பக்கத்திரைகளும் இருக்கும்

phantom drawing: (வரை.) புனைவுறு வரைபடம் : ஒரு திட்ட வரை படத்தில் கருத்துருவைக் காட்டும் வகையில் புள்ளிகளால் வரையப்பட்டுள்ள பகுதி

pharmaceuticals: (வேதி .) ஆக்கமருந்து : மருந்துத் கடைகளில் ஆக்கம் செய்து விற்பனை செய்யப்படும் மருந்துகள் மற்றும் வேதியியற் பொருட்கள்

phase : (மின்.) மின்னோட்டப் படி நிலை : மாறுபட்ட அலை இயக்கத்தில் செல்லும் மாற்று மின்னோட்ட இயக்கப் படிநிலை

phase angle : (மின்.) மாற்று நிலைக் கோணம் : மாற்று மின்னோட்டச் சுற்று வழியில் மின்னோட்ட இயக்க்ப் படிநிலையைக் குறிக்கும் கோணம்

phase, meter : (மின்.) மின்னோட்டப் படிநிலை மானி: மின்