பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
46

கலந்திடும் போது கடினத் தன்மையளிக்கிறது

anthrax : (நோயி,) நச்சுப்பரு : கால்நடைகளுக்கு உண்டாகும் ஆபத்தான சீக்கட்டு இது கால்நடைகளின் தோலில் கரும்புள்ளிகளை உண்டாக்கும்

antibiotic: (வேதி) உயிர் எதிரி': பெரும்பாலும் உயர் வகை உயிரினங்களுக்குத் தீங்கு செய்யாமல், மற்ற உயிரிகளைக் கொல்கிற அல்லது அவற்றின் வளர்ச்சியைக் குன்றச்செய்கிற அல்லது முழுமையாகத் தடை செய்கிற பூசணம் அல்லது பூஞ்சைக் காளான் உயிர் எதிரி எனப்படுகிறது. இந்தப் பொருளை வேதியியல் முறையில் செயற்கையாக அல்லது ஒரு நுண்ணுயிரியிலிருந்து தயாரிக்கலாம்

antibody : (நோயி.) நோய் எதிர்ப் பொருள் : தீங்குதரும் அயற் பொருளுக்கு எதிராக உயிரினத்தின் உடலில் உண்டாகும் பொருள்

anticathode : (மின்) எதிர்மின் கதிர்க் குவியம் : ஊடுகதிருக்குரிய (எக்ஸ்-ரே) வெற்றுக் குழாய்களின் மின்னோட்ட இலக்கு

antidote. (மருந்.) மாற்று மருந்து: நச்சுப் பொருளை முறிப்பதற்குக் கொடுக்கப்படும் மாற்று மருந்து. எடுத்துக்காட்டாக, அமில நஞ்சினை முறிக்க சோடியம் பைக்கார்பனேட் போன்ற காரப் பொருள்களைக் கொடுத்தல்.

antidrag wire (வானூ) முன்னேற்றத்தடை எதிர்ப்புக் கம்பி : ஒரு விமானத்தின் இறகினுடைய நாண் வரைக்கு இணையாகவும், அது பறந்துசெல்லும் அதே திசையிலும் செயற்படுகிற விசைகளை எதிர்ப்பதற்கு அடிப்படையாக வடிவமைக்கப்பட்ட ஒரு கம்பி. இது பொதுவாக இறகில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும்

antifebrin : (மருந்து) காய்ச்சல் எதிர்ப்பு மருந்து: காய்ச்சலைக் குணப்படுத்திக் கொடுக்கப்படும் அசிட்டானிலைடு என்ற மருந்து. இது அசிட்டிக் அமிலம், அனிலின் இரண்டும் கலந்து பெறப்படுகிறது

antifreeze : (தானி) உறை எதிர்ப்புக் கரைசல் : குளிர்விக்கும் சாதனத்தில் உறை வெப்ப நிலையைக் குறைக்க நீருடன் சேர்க்கப்படும் கரைசல்

antifreeze mixture: (தானி; எந்.) உரைதல் தடுப்புக் கலவை : உறைவதைத் தடுப்பதற்கான குளிரூட்டும் அமைப்பிலுள்ள நீருடன் கலந்த ஆல்கஹால், கிளிசரின் அல்லது ஏதேனும் வேதியியல் தயாரிப்பு

antifriction metal : (உலோ) உராய்வுத் தடுப்பு உலோகம் : தண்டுகள், இருசுகள் ஆகியவற்றின் அடிப்படிவுகள், தாங்கிகள் போன்ற சுழலும் உறுப்புகளுக்கும் உள்வரிப் பூச்சுக்காகப் பயன்படுத்தப்படும் மென்மையான உலோகக் கலவை. இது உராய்வைத் தடுக்கும் மசகுப் பொருளாகப் பயன்படுகிறது. தகரம், செம்பு, அஞ்சனம் முதலியவற்றின் கலவை. விலை மலிவானது; திறன் வாய்ந்தது

antigen : (நோயி..) காப்பு மூலம் : அயற்பொருளிலிருந்து உயிரினைக் காக்கும் உயிர்த் தற்காப்புப் பொருளை உண்டு பண்ணும் பொருள்மூலம். இது இரத்தத்தில் உற்பத்தியாகும் நோய் எதிர் பொருளை உண்டாக்குகிறது

antigravity : (விண்) புவிஈர்ப்பு எதிர்விசை' : ராக்கெட் கலங்கள், மனிதவுடல்கள் போன்ற பொருண்