பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
479

photo electrons : (மின்.) ஒளி எலெக்ட்ரான்கள்: ஒளியின் காரணமாக வெளியிடப்படும் எலெக்ட்ரான்கள்

phto-engraving : (அச்சு.) ஒளி செதுக்கு வேலை : ஒளிப்பட உத்தி மூலமாக செதுக்கு வேலைப்பாடுகள் செய்யும் முறை

photography : (வேதி.) ஒளி படக்கலை : ஒளியுணர்வுடைய தகடு, படச்சுருள், தாள் ஆகியவற்றில் ஒளி படியச் செய்து, சில வேதியியற் பொருட்களைக் கொண்டு அவற்றைப் பக்குவம் செய்வதன் வாயிலாக உருவங்களைப் பதிவு செய்யும் முறை

photagravure ; (அச்சு.) ஒளிப் பட மறிபடிவத் தகட்டுச்செதுக்குரு: ஒளிப்பட மறிபடிவத்தை உலோகத் தகட்டில் பதியவைத்துச் செதுக்குவது மூலமாக ஒப்புருவம் எடுத்தல்

photometer : (இயற்.) ஒளிச் செறிவுமானி: ஒளியின் செறிவினை அள்விடுவதற்கு அல்லது பல்வேறு ஒளிகளின் செறிவினை ஒப்பிடுவதற்குப் பயன்படும் ஒரு கருவி

photomicrograph: (உலோ.) உருப்பெருக்கு ஒளிப்படம் : உருப் பெருக்காடியினால் விரிவாக்கம் செய்யப்பட்ட பொருளின் ஒளிப் படம். உருப் பெருக்காடியையும், ஒளிப்படக் கருவியையும் இணைத்து இந்தப்படம் எடுக்கப்படுகிறது. உலோகப் பொருட்களின் விரிவாக்கம் 100 முதல் 500 மடங்குவரை அமைந்திருக்கும்

photomultiplier : (மின்.) ஒளி விசைப்பெருக்கி: எதிர்முனையை ஒளி தாக்கும் போதும் எலெக்ட்ரான்கள் வெளிப்படுகின்றன. இந்த எலெக்ட்ரான்கள், தொகுப்புத் தகட்டினைத் தாக்குவதற்கு முன்பு, ஒரு துணைத் தகட்டு வரிசையினைத் தாக்கும்படி இயக்கப் படுகிறது. இதன் விளைவாக, துணை உமிழ்வு மூலம் மின் மிகைப்பு ஏற்ப்டுகிறது

photostat : ஒளி நகல் படவிருப் படிவம்: ஆவணங்கள், வரிவடிவங்கள் முதலியவற்றின் படியுருவங்களை எடுப்பதற்கான ஒளிப்பட அமைவு

photosynthesis, (வேதி.) ஒளிச் சேர்க்கை: தாவரங்களின் இலைகளில் சூரிய ஒளிபடும்போது, நீரிலிருந்தும் கார்பன்டையாக்சைடிலிருந்தும் தாவரங்கள் கார்போஹைட்ரேட்டுகளைத் தயாரித்துக் கொள்ளும் முறை

photon: (மின்.) ஃபோட்டோன் : மின்காந்த விசையின் ஒரு சிறு கூறு

photosensitive" (மின்.) ஒளியுணர்வு: ஒளியின் மூலம் ஆற்றலூட்டப்ப்ட்ட தனது மேற்பர்ப்பிலிருந்து எலெக்ட்ரான்களை வெளியிடும் ஒரு பொருளின் இயல்பு

photosphere: (விண்.) ஒளிக் கோசம்: சூரியன், விண்மீன் முதலிய வான்கோளங்களைச் சூழ்ந்துள்ள ஒளிக்கோசம்

photo-transistor : ஒளிமின் பெருக்கி: ஒரு வகை மின்பெருக்கி. இதில் ஒளிபடும்போது அதன் மின்னோட்டத் தடை வெகுவாகக் குறைக்கப்படுகிறது

phototropic: ஒளிமுகச்சாய்வு: தாவரங்கள் ஒளியை நோக்கி நகர்தல் அல்லது வளைதல். இவற்றில் தண்டுகள் ஒளியை நோக்கி வளர்கின்றன

photo tubes (மின்.) : ஒளிக்குழல் :ஒளியுணர்வுப் பொருளைத் தனது உமிழ்வானாக அல்லது எதிர் முனையாகப் பயன்படுத்தும் ஒரு வெற்றிடக்குழல்