பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
513
R



rabbet: (மர.வே.) மூலைப் பொருத்துவாய்: இசைப்பு வாய் மூலம் இணைப்பதற்கு விளிம்பில் செய்யப்படும் இசைப்பு வாய் வெட்டு

rabbet joint: (மர.வே.) மூலை இணைப்பு: மூலைப் பொருத்து வாய் மூலம் இணைத்தல்

rabbet plane: (மர.வே.) மூலைப் பொருத்துவாய் இழைப்புளி: மூலைப் பொருத்துவாய் இழைப்ப தற்கான ஓர் இழைப்புளி

race: (விண்.) வான்கோளப் போக்கு: வான்கோளங்கள் இயங்கு பாதை

race rotation: (வானூ.) இயங்கு சுழற்சி: விமானத்தில் முற்செலுத்தி மூலமாக அல்லது அதன் விளைவாகச் செல்லும் காற்றோட்டத்தின் மீது முற்செலுத்தியின் இயக்கத்தினால் உண்டாகும் சுழற்சி

raceway: (மின்.) புழைவழி: காப்புக்குழாய், வார்ப்படக்குழாய் போன்ற உட்புழையுடைய பொருட்களைக் குறிக்கும் சொல். இவை பெரும்பாலும் மறைவாக இருக்கும். இவற்றின் வழியாக மின்கம்பிகள் ஒரு வெளிச் செல் வழியிலிருந்து இன்னொரு வழிக்குக் கொண்டு செல்லப்படுகின்றன

rack and pinion: (அ.க) பற்கம்பிச் சூழல் சட்டம்: பற்கள் பொளிந்துள்ள சட்டம் மூலம் சுழலியக்க, நேர் இயக்க மாறுபாடு செய்யும் அமைவு

rack: அழிச்சட்டம்: (1) பொருள்களை வைப்பதற்கான கொள்கலச் சட்டம். (2) பற்கள் பொளிந்த கம்பி அல்லது சட்டம். (3) அச்செழுத்து அடுக்குப் பலகைகளை வைப்பதற்குப் பயன்படும் உலோகத்தாலான அல்லது மரத்தினாலான சட்டம்

radar: ராடார் (தொலை நிலை) இயக்கம்: ஆற்றல் வாய்ந்த மின் காந்த அலை அதிர்வியக்க மூலம் தன்னிலையும், விமானங்கள். கப்பல்கள், கடற்கரைகள் முதலியவற்றின் நிலைகளும் கண்டறிவதற்குரிய கருவி அமைவு

radar mile: (மின்.) ரேடார் மைல்: ரேடார் துடிப்பு, ஒரு மைல் துாரமுள்ள இலக்கிற்குச் சென்று திரும்புவதற்குப் பயணம் செய்யும் தொலைவு. ரேடார் துடிப்பானது ஒரு மைல் தூரம் சென்று வர 10.75x 10-8 வினாடி நேரம் தேவை

radial: மையவிலக்கு: மையத்திலிருந்து அல்லது இருசிலிருந்து புற நோக்கி விலகிச் செல்கிற அமைவு

radial arm: (எந்.) ஆரைக்கரம்: இயங்கும் பிடிமானம் இது ஆரை. துரப்பண எந்திரத்தில் துரப்பணச் சேணத்தைத் தாங்குகிறது

radial axle: (எந்.) ஆரை இருசு: பாதை, வளைவுக்குத் தக்கபடி அமைந்த இருசு

radial bar: ஆரைச் சலாகை: இது ஒரு மரச்சலாகை இதன் நுனியில் ஒரு பென்சில் இணைக்கப்பட்டிக்கும். இதனைக் கொண்டு பெரிய வளைவுகளை வரையலாம்