பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/522

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
520

rayon: ரேயான் (மரவிழைப்பட்டு): மர இழையிலிருந்து உருவாக்கப் படும் செயற்கைப்பட்டு வகை

reactance: (மின்.) எதிர்வினைப்பு: ஒரு மாற்று மின்னோட்டச் சுற்று வழியில், மின்னோட்டத்தை எதிர்க்காமல், ஆனால் அதற்கும் அதன் மின்னியக்க விசைக்குமிடையிலான நிலைவேறுபாட்டினை உண்டாக்குகிற தடையின் உறுப்பு

reaction : எதிர்வினை: வேதியியலில் புறத்தாக்குதலால் ஏற்படும் இயல்பு மாறுபாடு

reaction coil : எதிர் வினைப்புச் சுருள்

reaction engine : (வானூ.) எதிர் வினைப்பு எஞ்சின் (எதிர்வினைப்பு விசைப் பொறி): ஓர் எஞ்சின் அல்லது விசைப்பொறி வெளியேற்றும் பொருளுக்குத் தனது எதிர் வினைப்பு மூலம் உந்து விசையை உண்டாக்குகிறது. இந்த எஞ்சின் எதிர்வினைப்பு எஞ்சின் எனப்படும்

reaction , turbine : (வானூ.) எதிர்வினைப்பு விசையாழி: சுழலி அலகுகள் கூம்பலகுகளின் வளையமாக அமைந்த ஒரு வகை விசையாழி. இந்த அலகுகளிடையிலிருந்து வெளியேற்றப்படும் திரவத்தின் எதிர்விணைப்பு மூலம் விசையாழி சுழல்கிறது

reaction turbine  : (மின்.) எதிரடி விசையாழி : நீரோட்டம் அல்லது வாயு அல்லது நீராவி பாய்வதால் மின்விசையை நேரடியாக உற்பத்தி செய்யும் பொறி. ஒரு தூண்டு விசையாழியில் ஒரு சக்கரத்தின் அலகில் நீர் (அல்லது நீராவி) தாக்கி சக்கரத்தைச் சுழலச் செய்கிறது. நீர் (நீராவி) முன்னோக்கிப் பாயும்போது சக்கரம் பின்னோக்கிச் சுழல்கிறது

reaction voltage : எதிர்வினைப்பு மின்னழுத்தம்

reactor : (மின்.) எதிர்வினைப்பான் : மாற்று மின்னோட்டங்களின் ஒட்டத்திற்கு எதிர்ப்பை அளிக்கும் ஒரு சாதனம். பொதுவாக, இரும்பு உள்ளீட்டின் மீதான கம்பிச் சுருள்களைக் கொண்டிருக்கும்

reactor : (இயற்.) அணு உலை : யுரேனியம் அல்லது புளுட்டோனியம் அணுக்களை ஒரு கட்டுப்பாட்டு முறையில் பிளவுபடுமாறு செய்து வெப்பத்தை உண்டாக்குகிற அல்லது கதிரியக்கத்தில் அணுக்களைப் பிளக்குமாறு செய்கிற ஓர் எந்திரம். ஒரு வேகங்குறைந்த அணுஉலையில், காரீயம், நீர் போன்ற ஓர் இடையீட்டுப் பொருளின் மூலம் அணுக்களின் வேகம் குறைக்கப்படுகிறது. ஒரு வேகம் மிகுந்த அணு உலையில், நியூட்ரான்களின் வேகம் குறைக்கப்படுவதில்லை. ஓர் அணு உலையிலிருந்து, கார்பன்டையாக்சைடு, நீர், உருகிய சோடியம் போன்ற குளிர்விக்கும் பொருள்களின் மூலம் வெப்பம் அப்புறப்படுத்தப்படுகிறது. சில அணு உலைகளில், நியூட்ரான்களை உறிஞ்சிக் கொள்ளும் காட்மியம் அல்லது போரோன் போன்ற கட்டுப்பாட்டுச் சலாகைகள் மூலம் வெப்பம் நீக்கப்படுகிறது

reactor, saturable (மின்.) பூரித எதிரியக்கி : நேர் மின்னோட்டம் சுருணைகளின் தொகுதி வழியாகச் செல்லக்கூடிய வகையில் அமைந்த ஒருவகை மின்மாற்றி. காந்த உட்புரியின் அளவினை நேர் மின்னோட்டம் கட்டுப்படுத்துகிறது. அதன்மூலம் மின்மாற்றியின் மாற்று மின்னோட்டமும் கட்டுப்படுத்தப்படுகிறது

reagent (வேதி.) வினையூக்கி : எதிர்த்தாக்காற்றல் மூலம் சேர்மத்தின் பொருட்கூறு கண்டுணர உதவும் பொருள். இது பகுப்பாய்வு வேதியியலில் பயன்படும் பொருள்