பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

526

relish: (தச்சு.) தோள் பட்டை: பொருத்து முளையின் மீதுள்ள தோள்பட்டை

reluctance (மின்.) காந்தத்தடை: காந்தமேற்றிய பொருள் காந்தப் பாய்வுக்கு ஏற்படுத்தும் தடையின் அளவு

reluctivity:(மின்.) காந்தத்தடைத் திறன் : காந்தமூட்டுவதை எதிர்க்கும் திறன். இது காந்தமூட்ட இடமளிக்கும் திறனுக்கு எதிர்மாறானது

remote. (தொ.கா.) தொலை நிகழ்ச்சி : நிலையங்களுக்கு வெளியே நெடுந்தொலைவிலிருந்து ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி

remote control: (தொ.கா.) தொலைக் கட்டுப்பாடு: தொலைக் காட்சி நிகழ்ச்சி போன்றவற்றை தொலைவிலிருந்து கட்டுப்படுத்தும் கருவி

remote control: (வானூ.) : தொலைக் கட்டுப்பாடு: மின்காந்தவியல், நெம்புகோல் போன்ற சாதனங்கள் மூலம் நெடுந்தொலைவிலிருந்து கட்டுப்படுத்தல்

அஞ்சல் அல்லது பிற மின்காந்தச் சாதனங்கள் மூலம் மின்னியல் கருவிகளை அல்லது எந்திரத்தை இயக்குதல்

remote pickup :(மின்.) தொலை ஒலி-ஒளிப்பதிவு: தொலைக்காட்சி வாதொலி நிலையத்திற்கு வெளியே நெடுந்தொலைவிலிருந்து தனிவகை ஊர்திச் சாதனங்களின் மூலம் பதிவு செய்தல்

remote pickups : சேய்மை அஞ்சல் : தொலைக்காட்சி நிலையத்திற்கு வெளியேயுள்ள ஊர்தி ஒளிபரப்புச் சாதனம் அல்லது தொலைவில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள சாதனம் மூலமாக நிகழ்ச்சிகளை ஒளி பரப்புதல்

renaissance: (க.க) மறுமலர்ச்சி : மத்திய காலத்தைப்பின் பற்றி 14-16ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த கலை, இலக்கிய, கட்டிடக்கலை மறுமலர்ச்சி. இது இத்தாலியில் முதலில் தோன்றியது

rendezvous : (விண்.) விண்கலச் சந்திப்பு: இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட விண்வெளிக் கலங்கள், முன்னரே குறித்த நேரத்திலும் இடத்திலும் பறக்கும் போதே சந்தித்துக் கொள்ளும் நிகழ்ச்சி

renewable fuse : (மின்.) புதுப்பிக்கத்தக்க உருகி : உருகும் பொருளை எளிதில் மாற்றக் கூடியவாறு, பொதிந்து வைக்கப்பட்டுள்ள உருகி

repair kit : செப்பனிடு கருவிக்கலம் : ஒரு குறிப்பிட்ட துறையில் பழுதுபார்ப்பதற்குப் பயன்படும் கருவிகளும், உறுப்புகளும் அடங்கிய ஒரு கலம்

repeater : (மின்.) திருப்புக் கருவி : அனுப்பிய தந்திச் செய்தியைத் தானாகவே திருப்பியனுப்பும் கருவி

repetition : மீளச் செய்தல் : ஒரே செயலைத் திரும்பத் திரும்பக் கூறியது கூறல்; மனப்பாடம் செய்தல், செய்து ஒப்பித்தல்

replacing : பதிலமர்த்துகை : பழைய இடத்திலேயே மறுபடியும் வைத்தல், பதிலாக இடங்கொள்தல், ஒருவர் இடத்தை மற்றொருவரைக் கொண்டு நிரப்புதல்

replica ; உருவநேர்படி : ஓர் உற்பத்திப் பொருளின் நேர் பகர்ப்பு

repousse - (உலோ.) புடைப்பகழ்வு : மெல்லிய உலோகத்தில் புடைப்பகழ்வுச் சித்திரமாக மறுபுறமிருந்து அடித்து உருவாக்கப்பட்ட உலோக ஒப்பனை வேலைப்பாடு