பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/535

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
533

rivet set: குடையாணி பொருத்தி:குடையாணிகளைப் பொருத்துவதற்குப் பயன்படும் குடைவான அல்லது கிண்ண முகப்புக்கொண்ட எஃகுக் கருவி

roach: (வானூ.) கப்பல் கவிவு: கப்பலில் சதுரப்பாயின் அடியிலுள்ள கவிவு. இதிலிருந்து கணமான நீர்த்தாரை நீர்ப்பரப்புக்கு மேலே பீச்சி எறியப்படும்

road drag : சாலை இழுவை : சாலையின் மேற்பரப்பினைச் சமப்படுத்துவதற்காக அதன்மேல் இழுக்கப்படும் சாதனம். இது சாலையைச் சுரண்டிச் சமனிடும் எந்திரத்திலிருந்து வேறுபட்டது

roaster (தானி.) தங்குதுறை நாவாய்: கரையோரம் நங்கூரமிட்டு நிற்கும் கப்பல். இதில் இருவர் இருக்கலாம். பின்புறத்தில் சரக்குகள் வைப்பதற்கான அறை இருக்கும்

roadster: நீற்று உலை: கனியங்கள் அல்லது உலோகங்களிலிருந்து தீங்கு தரும் வாயுக்கள். கார்போனிக் அமிலம், கந்தக டையாக்சைடு ஆகியவற்றை விரைந்து ஆவியாக்கி நீக்குவதற்குப் பயன்படும் நீற்றுவதற்கான உலை

roasting: (உலோ.) நீற்றுதல் : கனியங்கள் அல்லது உலோகங்களி லிருந்து தீங்கான வாயுக்கள், கார்போனிக் அமிலம், கந்தக டையாக்சைடு ஆகியவற்றை விரைந்து ஆவியாகச் செய்வதற்காகக் கையாளப்படும் செய்முறை

robot: எந்திர மனிதன்: மனிதன் செய்யும் காரியங்களைத் தானியங்கு எந்திர நுட்பங்கள் மூலம் தானே செய்திடும் எந்திரம். இத்தகைய கருவி மூலம் இயக்கப்படும் ஊர்தி அல்லது பொறி

rock crystal: (கனி.) படிகப் பாறை: நிறமற்ற, ஒளி ஊடுருவக் கூடிய படிகக்கல் வகை

rocket : (வானூ.) உந்து கூண்டு (ராக்கெட்): அக எரிபொருளாற்றலால் தொலைவுக்கு அல்லது உயரத்திற்கு உந்தித் தள்ளப்படும் உலோகத்தாலான நீள்வட்டு

rocket engine: (விண்.) ராக்கெட் எஞ்சின்: ஒருவகை ராக்கெட் செலுத்தும் சாதனம். இது தனது செயல்முறையில் ராக்கெட் முன்னோடியைவிடச் சற்றுச் சிக்கலான அமைப்புடையது

rococo : (க.க.) மிகு ஒப்பணை, கலைப் பாணி : மனைப்பொருள், சிற்பம் முதலியவற்றில் 17, 18 ஆம் நூற்றாண்டுப் பாணியை அடியொற்றி மிகையான உருவரை ஒப்பனைகளைச் செய்தல்

rod (மர.வே.) அளவு கோல் : செங்குத்துப் படிகளில் செங்குத்து உயரத்தைத் துல்லியமாக அளவிடுவதற்குப் பயன்படும் அளவுகோல். கட்டுமானத்தில் 11 முழம் நீளமுடைய அளவை அலகு

rod assembly: (தானி.) இணைப்புக்கோல் தொகுதி: இணைப்புக் கோல், உந்து தண்டு, உந்து தண்டு ஊசி, உந்துதண்டு வளையங்கள் போன்றவை அடங்கியது

rod cell : (உட.) கண் நுண்கம்பி: கண்ணிலுள்ள நரம்பு உயிரணு, இது மங்கலான ஒளியில் தீவிரமாகச் செயற்படுகிறது. பிரகாசமான ஒளியில் கண் கூம்புகள் (கூம்புவடி நரம்பு முனைகள்) தீவிரமாகச் செயற்பட்டு, கண் நுண்கம்பிகள் செயற்படாதிருக்கும்

rod ends , (பொறி.) இணைப்புக் கோல் நுனி: தாங்கிகளைக் கொண்ட இணைப்புக்கோல்களின் நுனிப்பகுதி. இதில் இணைப்புத் தகடு, திண்ணிய கொண்டை போன்ற வகைகள் உண்டு