பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
535

root : (எந்) வர்க்க மூலம் : கணிதத்தில் ஓர் எண்ணின் பெருக்க மூலம்

root diameter : (எந்.) ஆதார விட்டம்: ஒரு திரிகியையின் ஆதார விட்டம்

ஒரு பல்லிணைச் சக்கரத்தில் பல்லின் அடிப்புறத்தில் உள்ள விட்டம்

rope drilling : கயிற்றுத் துரப்பணம் : கயிற்றினால் இயங்கும் துறப்பணத்தால் துளையிடுதல்

rope driving : (எந். பொறி.) கயிற்று இயக்கம் : கயிற்றுப் பல்லிணை மூலம் விசையை மாற்றம் செய்தல். இது வார்ப்பட்டை இயக்கத்திலிருந்து வேறுபட்டது

rosebit : (எந்.) துளையிடு கருவி: துரப்பணத் துவாரங்களுக்கு மெருகேற்றும் திண்மையான நீள் உருளை வடிவ இணைத் துளையிடு கருவி

rose cutter : (பட்.) பட்டை வெட்டு கருவி : அரை உருள் வடிவில் பன்முகமாகச் செதுக்கப்பட்ட பட்டை வெட்டுகருவி

rose-engine : கடைசல் பொறி : ஒரு வகைக் கடைசல் பொறி அமைவு

Rosendale cement : ரோசண்டேல் சிமென்ட் : நியூயார்க் அருகிலுள்ள ரோசண்டேல் அருகில் கிடைக்கும் இயற்கை சிமென்டுக்கு அளிக்கப்பட்டுள்ள பெயர்

rose reamer : (எந்.) பட்டைத் துளைச் சீர்மி : உலோகங்களில் துளையிடுவதற்கான பொறியமைவு. இதில் பக்கங்களுக்குப் பதிலாகச் சாய்வாகவுள்ள நுனி மூலம் வெட்டுதல் நடைபெறுகிறது

rosette : (க.க.) ரோசாவடிவ ஒப்பனை : ரோசா வடிவ ஒப்பனையுள்ள மரபுச்சின்னம்

rosette : (க.க.) ரோசாப் பூவணி: ரோசா வடிவத்திலான பூவணி வேலைப்பாடு

rose window : (க.க.) ரோசாப் பலகணி : ரோசாப்பூ வடிவில் அமைந்த பலகணி

rose wood : (மர.வே.) கருங்காலி : கறுப்பு நிறமுள்ள, கனத்த, கடினமான மேலடை மெல்லொட்டுப் பலகையாகப் பயன்படுத்தப்படுகிறது

rosin : மண்டித்தைலம்: தேவதாரு மரங்களிலிருந்து பிசின் வடிவில் கிடைக்கும் பொருள். வெள்ளீய வேலைப்பாடுகளில் பற்ற வைப்பதற்கான உருகு பொருளாகப் பயன்படுகிறது. வண்ணங்கள். சோப்புகள் செய்வதற்கும் பயனாகின்றது

roster : வேலை முறையேடு : ஓர் அட்டவணை அல்லது பெயர்ப் பட்டியல்

rostrum : (க.க.) உரை மேடை : பொதுவில் உரையாற்றுவதற்குப் பயன்படும் பேச்சு மேடை

rotary : சுழல் பொறி :. ஒரு சக்கரம் போல் தனது அச்சில் சுழலும் பொறி

rotary converter : (மின்.) சுழல் ஒரு போக்கி : மாற்று மின்னோட்டச் சுற்று வழியுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு தனிப்பொறி. இது நேர் மின்னோட்டத்தை அல்லது மாற்று மின்னோட்டத்தை வழங்கும்

rotary cutter : (எந்.) சுழல் கத்தி : ஒரு சுழல் முனையுடன் இணைக்கப்பட்டுள்ள, சுழலும் கத்தி. இது சுழலும் போது வேலைப்பாடு செய்யப்படும் பொருள் வெட்டப்படுகிறது