பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
543

நீக்கம் : சாக்கடைக் கழிவு நீக்கத்திற்குரிய ஏற்பாடுகள்

sans-serif : (அச்சு.) மொட்டை அச்சுரு : அச்சுருவகையில் ஓரங்கட்டாத மொட்டை முனையுடைய அச்சுரு

sap: (தாவர.) தாவர உயிர்ச் சாறு: தாவரங்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாத சாறு

sapling : (தாவர.) நாற்று : கன்று, இளஞ் செடி

saponification : சவர்க்காரமாக்குதல் : சவர்க்காரம் போன்று வழுவழுப்பானதாக ஆக்குதல்

sap wood : மென்மரம் : புறமரத்தின் மென்மையான உட்பகுதி

sash : (க.க.) பலகணிச் சட்டம் : பலகணியின் சறுக்குக் கண்ணாடிச் சட்டப் பலகை

sash chain : பலகணிச் சட்டச் சங்கிலி : சறுக்குப் பலகணிச் சட்டம் இயக்கும் பளுவேந்திய சங்கிலி

sash weight : பலகணிச் சட்ட இயக்கு பளு : சறுக்குப் பலகணிச் சட்டத்தின் இயக்கு பளு

sassafras : (தாவர.) மருந்துப் பட்டை மரம் : மங்கலான ஆரஞ்சு நிறமுடைய, துளையுடைய, எளிதில் முறியக் கூடிய மென்மரம். இது தென் அமெரிக்காவில் வளர்கிறது

satellite : துணைக் கோள் : ஒரு கோளைச் சுற்றிச் சுழலும் சார்புக் கோள்

satellite television station : செயற்கைக் கோள் தொலைக்காட்சி நிலையம் : ஒரு தொலைக்காட்சி நிலையத்தில் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரே இணைவனத்திலிருந்து ஒளிபரப்பப் படுமானல் அதனைச் செயற்கைக் கோள் தொலைக்காட்சி நிலையம் என்பர். இந்த நிலையம் இணைவன நிகழ்ச்சிகளோடு, உள்ளுர்ச் செய்திப் படங்களையும் ஒளிபரப்பும். இந்நிலையம், ஒரு தலைமை நிலையத்தின் ஒளிப்பரப்புப் பகுதிக்கு வெளியேயுள்ள சமுதாயத்திற்கும் பணிபுரிய முடியும்

satelloid : (விண்.) செயற்கைக் கோள் கலம் : பூமியைச் சுற்றி விட்டு மீண்டும் பூமிக்குத் திரும்பி வரும் வகையில் பாதி விமானம் போன்றும், இன்னொரு பாதி செயற்கைக்கோள் போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ள மனிதரால் இயக்கக்கப்படக் கூடிய ஒரு விண்வெளி ஊர்தி

satin wood : முதிரை மரம் : ஒரு வகை மென்மரம். முக்கியமாக இலங்கையில் காணப்படுகிறது. கனமானது; வெண்மைகலந்த நிறமுடையது; மெல்லிழை போன்ற கோடுகளுடையது. உயர்தரமான் அறைகலன்கள் தயாரிக்கப் பயன்பயன்படுகிறது

saturated air : (குளிர் பத.) பூரிதக் காற்று: ஒரே வெப்ப நிலையில் காற்றும் நீராவியும் கலந்த ஒரு கலவை

saturated steam : பூரித நீராவி : ஒரு குறிப்பிட்ட அழுத்து நிலுைக்கு நேரிணையான கொதி நிலை வெப்பத்தில் உள்ள நீராவி. நீராவி எந்த நீரிலிருந்து உண்டாகிறதோ அந்த நீருடன் தொடர்பு கொண்டுள்ள நீராவி

saturation : (மின்.) செறிவு நிலை : பொருளில் மின்னாற்றல் செறிந்துள்ள நிலை. இந்த நிலையை எட்டியபின் ஆம்பியரை அதிகரித்தாலும் காந்த் விசைக் கோடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதில்லை