பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/561

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
559

shunt-wound motor : (மின்.) இணைச் சுருணை மின்னோடி: மின் சுமை மாறுபட்டிருப்பினும் மின்னோடியின் வேகம் ஒரே அளவில் இருக்கும் வகையில் பயன்படுத்தப்படும் மின்னோடி

shutter : ஒளித்தடுப்புத் திரை : ஒளிப்படக் கருவியில் ஆடி வழியாக ஒளி புகுந்து செல்வதைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு சாதனம்

side bands : (மின்.) சம அதிர்வுப் பட்டிகள்: அலை மாற்றம் காரணமாக, ஊர்தி அலைவெண்ணுக்கும் மேலும் கீழும் உள்ள அலைவெண்கள்

side carrier frequencies : (மின்.) பக்கஊர்தி அலைவெண்கள்: ஊர்தி அலை அலைவெண், அலை மாற்றி அலைவெண் இரண்டின் கூட்டுத் தொகைக்கும் அவற்றுக்கிடையிலான வேறுபாட்டுக்கும் சமமான அலைவெண் அலைகள்

side head : (அச்சு.) ஓரத் தலைப்பு: அச்சுப் பக்கங்களில் மையத்தில் அல்லாமல் பக்கத்தின் ஓரத்தில் அச்சடிக்கப்படும் தலைப்பு

side milling cutter : (எந்.) பக்கத்துளை வெட்டு கருவி : பக்கங்களிலும் சுற்றுக் கோட்டிலும் வெட்டுவதற்குப் பயன்படும் குறுகிய முகப்புக் கொண்ட வெட்டுக் கருவி சுழல் இருசு மீது இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட வெட்டுக் கருவிகளை அமைத்திருந்தால் அவை கவட்டு வெட்டுக் கருவி எனப்படும்

side rake : (எந்.) பக்கவெட்டுச் சரிவு : கடைசல் எந்திரம், இழைப்புளி, வடிவாக்கக் கருவிகள் போன்றவற்றின் மேல் முகப்பின் மீதான வெட்டு முனையிலிருந்து விலகிச் செல்லும் குறுக்குச் சரிவு

sidereal day : (விண்.) மீனாள்: நாள் மீன் இயக்கக் கணிப்புக் காலம். இது சூரியநாள் எனப்படும் நமது நாளைவிட நான்கு நிமிட நேரம் குறைவாகும்

sidereal time : (விண்.) நாள் மீன் காலக் கணிப்பு : நாள் மீன் சார்ந்த காலக்கணிப்பு முறை

sidereal year : (விண்.) நாள் மீன் ஆண்டு : நாள் மீன் இயக்கக் கணிப்பு ஆண்டு

siderography: (உலோ.) எஃகு செதுக்கு வேலை: எஃகின் மீது செய்யப்படும் செதுக்கு வேலைப்பாடு

side-saddle : புடைச் சேணம் : இரு கால் மிதிகளையும் ஒரு புறமாகக் கொண்ட சேணப் பின்னிருக்கை

siderite : (உலோ.) சைடரைட்: (F3CO3) குறைந்த அளவு இரும்பு கொண்ட ஓர் உலோகத் தாதுப் பொருள்

side slipping : (வானூ.) ஓரச்சாய்வு : விமானத்தின் ஓரச்சாய்வு இயக்கம், விமானத்தின் பக்க ஊடச்சு சாய்வாக இருந்து, அந்த அச்சின் கீழ்முனையின் திசையில் சறுக்கல் ஏற்படும் போது உண்டாகும் நிலை

side-wheel : பக்கத் துடுப்பாழி : நீராவிக் கப்பலின் பக்கத் துடுப்பாழி

side stick: (அச்சு.) பக்க அச்சுக் கோப்புப் கட்டை : அச்சுப் பணியில் அச்சுப் படிவங்கள், நீர் அச்சுப் படிவங்கள் ஆகியவற்றை இறுக்குவதற்குப் பக்கவாட்டில் அடித்திறுக்கப் பயன்படும் ஆப்பு போன்ற நீண்ட கட்டை

side stitch :(அச்சு) பக்கத் தைப்பான் : நூல்களைக் கட்டு