பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/581

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
579

எடைக் கோல் : சுருள் வில்லின் முறுக்கினால் நிறையளக்கும் துலாக்கோல்

spiral coupling : (எந்.) திருகு சுருள் இணைப்பு : ஒரு திசையில் மட்டுமே சுழற்றும் போது இணைந்து கொள்ளும் அமைப்புடைய தாடை இணைப்பு

spiral gear : (பல்.) திருகு சுருள் பல்லிணை : திருகு சுழல் வட்டத்தின் ஒரு பகுதியாகப் பல் அமைந்துள்ள பல்லிணை. இதனைத் 'திருகுப் பல்லிணை' என்றும் அழைப்பர்

spiral instability: (வானூ.) சுழல் உறுதியின்மை : சில வகை விமானங்களில் வழித் தடுமாற்றம் காரணமாக ஏற்படும் உறுதியின்மை

spiral spring : (எந்.) சுழல் விற்சுருள்: கடிகாரம் அல்லது கைக் கடிகாரங்களில் உள்ளது போன்ற சுழல் விற்சுருள்

spiral wheel : சுழல் சக்கரம்: ஊடச்சுக்குக் குறிப்பிட்டகோணத்தில் வெட்டப்பட்ட பற்களையுடைய சக்கரம்

spire : (க.க.) தூபி முனை : கூம்பு வடிவக் கோபுரம்

spirit level : (க.க.) குமிழி மட்டம்: கிடைமட்டத்தையும், செங்குத்து மட்டத்தையும் துல்லியமாக அளவிடுவதற்குப் பயன்படும் கருவி. இதில் ஒரு மர அல்லது உலோகப் பெட்டியில் வெறியம் ஏறத்தாழ முழுமையாக நிரப்பப்பட்டிருக்கும். குமிழி மையத்தில் நிலை நிற்குமானால், மட்டம் சரியாக இருக்கிறது என்பதைக் குறிக்கும்


குமிழி மட்டம்


spirit varnish : (மர.வே.) வெறிய மெருகெண்ணெய் : கற்பூரத்தைலம், ஆல்கஹால் போன்ற விரைந்து ஆவியாகக்கூடிய கரைமங்கள் அடங்கிய மெருகெண்ணெய்

splash lubrication : (தானி.) தெறிப்பு மசகு : மசகுப் பொருளை வாரித் தெறித்து மசகிடும் முறை

splay : (க.க.) தளச் சாய்வுக் கோட்டம் : கதவு, பலகணி முதலிய வற்றில் விளிம்பு புறக் கோட்டச்சாய்வு

splice : (மின்.) புரியிணைவு : மின் கடத்திகளை முறுக்கிப் புரியிணைவு செய்து ஒன்றுபடுத்துதல்

spline : இணையாப்பு : ஊடச்சுடனும் சக்கரத்துடனும் இழைந்து சென்று அவை தனித்து உருளாது இணைந்து உருளச் செய்யும் ஆப்பமைவு

spline : (மர.) இணையாப்பு : இரு கட்டைகளை இடையே ஆப்பிட்டு இணைக்கும் சிம்பு

split field : (மின்.) பிளவுப் புலம்: இரு துருவப் புலம் பொதிவு உடைய மின்னாக்கி. இதில் ஒரு புலம் ஒரு மூன்றாம் தூரிகையுடனும், மற்றொரு புலம் முதன்மைத் தூரிகையுடனும் இணைக்கப்பட்டிருக்கும். இந்த வகை மின்னாக்கியில் மூன்றாம் தூரிகையின் மின்னோட்டக் கட்டுப்பாட்டு அம்சங்கள் நிலைத்திருக்கும்

split gear : (பல்.) பிளவுப் பல்லிணை: இரு பிளவாகச் செய்யப்பட்ட பற்சக்கரம்

split nut : (எந்.) பிளவு மரையாணி : நீளவாக்கில் பிளவுடைய ஒரு மரையாணி, இது திருகில் நழுவிச்சென்று விரைவாக நகர்வதற்கு உதவுகிறது. இது பெரும்