பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/616

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

614

பயன்படுத்தப்படும் மின்னணுக் குழாய்

television channel : (மின்) தொலைக்காட்சி அலைவரிசை : படங்களையும் ஒலித் தகவல்களையும் ஒளிப்பரப்புவதற்காக ஒவ்வொரு தொலைக்காட்சி நிலையத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள அலைவெண் வரிசை

telltale: (எந் ) நிகழ்ச்சிப் பதிவீட்டுக் கருவி : எந்திரம் அல்லது வேலையின் ஒரு பகுதி மீது இணைக்கப்பட்ட தற்காலிகக் கருவி குறிப்பிட்ட வேலை செய்து முடிக்கப்பட வேண்டும் என்பது போன்ற தகவலை பணியாளருக்குத் தெரிவிக்கும் நோக்கம் கொண்டது

tellurium: டெல்லூரியம்(மண்மம்): எளிதில் உடைய, அரிய வெண்ணிற உலோகத் தனிமம். துத்த நாகத்தைத் தூய்மைப்படுத்துதற்கும், ஈயத்துடன் சேர்த்து உலோகக்கலவை தயாரிப்பதற்கும் பயன்படுகிறது

telpher line: தொங்கு இருப்பூர்தி: தொங்கு இருப்பூர்தி இங்கே காணும் ஒற்றைத் தண்டவாளத்தில் ஓடும் சக்கர ஆதாரத்தில் தொங்கியவாறு மின்விசையால் இயங்குகிற சரக்கு இருப்பூர்தி

temper : (உலோ.) செம்பதமாக்கல்: எஃகு வகையில் அடுத்தடுத்து வெப்பமூட்டிக் குளிரச் செய்வதன் மூலம் சரியான உறுதியும் நீட்டிப்பு ஆற்றலுமுடைய நிலைக்குப் பக்குவப்படுத்துதல்

temperament : (உள.) மனப்பாங்கு: மனிதனின் உணர்ச்சி,செயல்களுக்கு அடிப்படையாக இயல்பில் அமைந்த உடல்நிலைப் பாங்கு; உளப்பாங்கு. இது ஆவனது நரம்பு மண்டலம், நாளமில்லாச் சுரப்பிகள் ஆகியவற்றினால் உண்டாகிறது

temperature : (இயற்) வெப்பநிலை : ஒரு பொருள் பெற்றுள்ள வெப்பத்தின் அளவு

tempering : குவியமாகு : வேலைக்கு ஏற்ற வகையிலான அளவுக்கு உருக்கிற்குக் கடினத்தன் மையை ஏற்றுவதற்கான பக்குவ முறை. கரிம உருக்குகளைப் பொருத்தவரையில் ஒரு உருக்குத் துண்டை மிகச் சிவந்த நிலைக்குச் சூடேற்றி அதை எண்ணெய் அல்லது நீரில் அமிழ்த்தி எடுத்து நிறத்தைச் சோதித்தபின் இறுதியாக அமிழ்த்துவர். விசேஷ உருக்குகள் வெப்பப் பக்குவ முறையில் கடினமாக்கப்படுகின்றன

tempering Sand : (வார்) மணல் பதமாக்கு: அச்சுகளைத் தயாரிப்பபதற்காக வார்ப்பட மணலுடன் நீரைச் சேர்த்துத் தகுந்த ஈரப்பதத்தை அளித்தல்

template : (எந்) வடிவத்தகடு: தற்காலிகமான வடிவக் குறிப்பு அல்லது மாடல். இதைப் பயன்படுத்தி வேலை வடிவம் குறிக்கப்படுகிறது. அல்லது செய்த வேலையின் வடிவம் சரியா என்று இதைப் பயன்படுத்தி சோதிக்கப்படுகிறது

temple or tenter hook: குறுக்குக் கழி : கையால் நெசவு செய்யும் துணி ஒரே சீரான அகலத்தில் இருக்கும் வகையில் துணியை விறைப்பாக இழுத்துப் பிடித்து வைத்திருக்கும் சாதனம்