பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/621

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
619

கங்கள் ஒன்றாகப் பற்றவைக்கப்பட்டு இணைப்பு சூடாக்கப்படும் போது திறந்த முனைகளின் குறுக்கே ஒரு நேர் மின்னோட்ட அழுத்தம் உருவாகிறது என்ற விதியினை அடிப்படையாகக் கொண்ட ஒரு வெப்ப அளவி. வானொலி அலைவெண் மின்னோட்டங்களை அளவிட இது பயன்படுத்தப்படுகிறது

thermo dynamics : (பொறி) வெப்ப இயக்கவியல்: வெப்பத்தை ஆற்றலின் வடிவமாக அல்லது வேலைக்கான ஒரு சாதனமாகக் கருதி ஆராய்கிற அறிவியல் பிரிவு

thermoelectric metals : வெப்ப மின் உலோகம்: உயர் வெப்பத்தை அளவிடுவதற் காக வெப்ப இணைப்பிகளில் பயன்படுத்தப் படுகிற உலோகங்கள் அல்லது கலேர்கங்கள். பிளாட்டினம் நிக்கல், தாமிரம், ரேடியம் போன்றவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன

thermograph: (வானூ) வெப்ப அளவுக் கருவி : வெப்ப அளவைப் பதிவு செய்யும் கருவி

thermometer : வெப்பமானி : வெப்ப நிலையிலான மாற்றங்களை அளவிடுவதற்கான அளவீட்டுக் கருவி

thermonuclear : (விண்) அணு வெப்பாற்றல் தொடர்பு சார்ந்த : அணு எந்திரத் தாக்கு ஆற்றலுக்கும் வெப்ப ஆற்றலுக்குமிடையேயுள்ள தொடர்பு சார்ந்த

thermonuclear reaction : (வேதி.) அணுக்கருப் பிணைப்பு விளைவு : எடை குறைந்த இரு அணுக்கருக்கள் ஒன்றாக இணைந்து எடை கூடிய அணு வாக மாறும்போது மிகுந்த ஆற்றலை வெளிப்படுத்துகிற விளைவு

thermopile : (மின்) கதிரியக்கக் வெப்பக் கூற்றுமானி: வெவ்வேறான பொருட்களை மாற்றி மாற்றி வரிசையாக ஒரு தொகுப்பாக அமைத்து இந்த இணைப்புகளைச் சூடேற்றினால் மின்சாரம் உற்பத்தியாகும்

thermoplastic : (குழை) உருகு குழைமம் : குழைமக் (பிளாஸ்டிக்) குடும்பத்தில் ஒரு வகை. இக் குடும்பத்திலான ஒரு வகைப் பிசின் பொருளை மீண்டும் மீண்டும் வெப்பமேற்றி வடிவை மாற்றலாம். குளிர்ந்தபின் அது உறுதியாகிவிடும்

thermoset - (குலை) வெப்ப நிலைப்பி : ஒரு இரண்டாவது வகை பிளாஸ்டிக் பிரிவு. இந்த வகையின் கீழ்வரும் குடும்பங்களைச் சேர்ந்த பிசின்கள் ஒரு அச்சுக்குள் வைக்கப்பட்டு வெப்பமும், அழுத்தமும் செலுத்தப்படும் போது ஏற்படும் பிணையால் வேதியியல் மாற்றங்களுக்கு உட்பட்டு அச்சுக்கு ஏற்ற வடிவைப்பெற்று மீண்டும் உருக்க முடியாதபடி நிலைத்த நிலையைப் பெறுகிறது

thermosiphon system: (தானி) வெப்ப வடிகுழாய் ஏற்பாடு : இவ்விதக் குளிர்விப்பு முறையானது வெப்பநீர் மேலே செல்ல குளிர்ந்த நீர் அடியில் நிற்கும் என்ற உண்மையை அடிபபடையாகக கொண்டது. என்ஜின் காரணமாக வெப்பமடையும் நீர் ரேடியேட்டரில் மேலுக்குச் சென்று குளிர்வடைந்து மீண்டும் கீழே வரும்போது ஒப்பு நோக்கு கையில் குளிர்ந்து உள்ளது. பிறகு அது வெப்பமடைந்து மேலே செல்கிறது

thermostat : வெப்ப நிலைப்பி : வெப்பஅளவைத் தானாக ஒழுங்குபடுத்திக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கருவி