பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/624

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

622

திரவம் அல்லது வாயுக்களின் அழுத்தத்தை அதாவது குழாய் இணைப்புகளின் உறுப்புகளை நன்றாக இறுக்கிப் பொருத்துதல் (3) ஜாக் ஸ்குரு, பல் இணைப்பு செலுத்தி போன்றவை மூலம் விசையை செலுத்துதல் (4) மைக்ரோ மீட்டர், காலிபர் போன்ற கருவிகளின் பகுதிகளைத் துல்லியமாகப் பிரித்துஅமைத்தல்

thread tool (எந்) புரிகருவி: கடைசல் எந்திரத்தில் பொருத்தும் வேலைக் கருவி. இடப்பட வேண்புரி அளவுக்கு வடிவமைப்புக் கொண்டது

three and four fluted drills : (உலோ. வே.) மூன்று மற்றும் நான்கு திருகு பள்ள துளையீடுகள் : சுரண்டு துருவிகளுக்குப் பதில் பல சமயங்களில் பயன்படுவது. புதிதாகத் துவங்கி துளையிட அவை பயனற்றவை.ஆனால் ஏற்கெனவே துளையிடப்பட்ட துருவப்பட்ட துளைகளைப் பெரிதாக்க உதவுபவை

three phase : (மின்) மூன்று பேஸ் : மூன்று ஏ. சி. சுற்றுகள் அல்லது 120 மின் பாகைகளில் பேஸ் வித்தியாசப்படும் சர்க்கி யூட்டுகள்

three-phase alternating current : (மின்.) மூன்று நிலை மாற்று மின்னோட்டம் : மூன்று மாற்று மின்னோட்டங்களின் ஓர் இணைப்பு. இதில் இவற்றின் மின்னழுத்தங்கள் 120 அல்லது ஒரு சூழற்சியின் இடம் பெயர்ந்து இருக்கும்

three ply : மூவடுக்கு ஒட்டுப் பலகை : தனித்தனியான மூன்று அடுக்குகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட ஒட்டுப் பலகை (பிளைவுட்)

three-point suspension :(தானி.) மும்முனை நிலைப்பு (மோட்டார் வாகன): மோட்டார் வாகனத்தில் என்ஜினின் எடையை மூன்று நிலைகள் தாங்கி நிற்கும் வகையில் என்ஜினை நிலைப்படுத்தும் முறை

'three-point perspective : (வரை.) மும்முனைத் தொலைவுத் தோற்றம் : ஒரு பொருளின் படத்தில் அதன் முதன்மை விளிம்பு களில் எதுவும் படப்பரப்புக்கு இணையாக இல்லாதிருக்கும் தோற்றம். ஒவ்வொரு விளிம்பு களின் தொகுதியும் தனி மறைவு முனையைக் கொண்டிருக்கும்

three-quarter binding: முக்கால் நூல்கட்டு : அரைநூல் கட்டுப் (பைண்டிங்) போன்றதே, ஆனால் தோல் பகுதி நிறைய வெளியே தெரியும்

three-quarter floating axse: (தானி.) முக்கால் மிதப்பு அச்சு : பின்புற அச்சின் உறைப்பெட்டி சக்கரங்களின் மையத் தண்டுவரை நீண்டிருக்கும். அச்சின் வெளிப்புற முனைகள் சக்கரத்தண்டின் தகட்டு விளிம்புகளுடன் பற்றவைக்கப் பட்டிருக்கும் அல்லது இணைக்கப் பட்டிருக்கும் தகடு சக்கர மையத் தண்டுடன் போல்ட்மூலம் பொருத்தப்பட்டிருக்கும்.சக்கரம் ஒவ்வொன்றிலும் ஒரு பேரிங்குதான் இருக்கும். அது அச்சுத் தண்டின் உறைப்பெட்டி மேல் பொருத்தப்பட்டிருக்கும்

three-square file : (தானி) முப்பட்டை அரம்: மூன்று முளை கொண்ட அரம், ரம்பத்தின் பற்களைக் கூராக்குவதற்குப் பயன்படுவது

three-square file : (உலோ) முச்சதுர அரம் : முக்கோண அல்லது மும்முனையுடைய ஓர் அரம். இது இரம்பத்தைக் கூர்மையாக்கப் பயன்படுகிறது