பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/626

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

624

throttle : திராட்டில் : நீராவி போன்றதைக் கட்டுப்படுத்த அல்லது அடைத்து நிறுத்த, இதைச் செய்வதற்கான ஒரு கருவி

throttle valve : (எந்) நீராவியைக் கட்டுப்படுத்தும் தடுக்கிதழ் ; 1. மோட்டார் வாகன என்ஜினில் பெட்ரோலுடன் கலப்பதற்கு காற்று உள் புகுவதைக் கட்டுப் படுத்துவது போன்று, ஒரு குழாயில் அல்லது திறப்பில் முற்றிலுமாக அல்லது ஓரளவு மூடியபடி இருப்பதற்காக்ப் பொருத்தப்பட்டுள்ள மெல்லிய பட்டையான தகட்டு வால்வு

2. நீராவிக் குழாயில் நீராவி வருவதைக் கட்டுப்படுத்துவதற்கான வால்வு

through bolt: (எந்) திருபோல்ட்: இணைக்கப்பட வேண்டிய பகுதிகளில் உள்ள துளைகளில் உள்ள இடைவெளி வழியே செல்கின்ற போல்ட். இணைப்புப் பகுதிகள் முற்றிலும் நட்டுகளைப் பயன்படுத்தி முடுக்கப்படுகின்றன

through shake : மர உத்திரத்தில் வருடாந்திர வளர்ச்சி வளையங்கள் இடையே உறுதியின்றி இருக்கின்ற இடைவெளி. உத்திரத்தின் இரு முகப்பகுதிகளிலும் இது நீண்டு அமைந்திருக்கும்

throw : (எந்.) விரை சூழல் இயக்கப் பொறி : ஓர் என்ஜினின் கிராங் ஷாப்டில் உள்ளது போன்று அச்சு மைய வேறுபாட்டு அளவு. இது பிஸ்டனின் அடியின் நீளத்தில் பாதிக்குச் சமம்

throwing : வளைதல் : மட் பாண்ட வளைவு சக்கரத்தில் ஒரு மண்கலத்துக்கு வடிவம் அளித்தல்

thrust bearing or thrust block : (எந்.) தள்ளு தாங்குதல் அல்லது குழை முட்டு : நீளவாட்டில் தள்ளு விசையைத் தாங்குகின்ற பொறி உறுப்பு

thrust chamber : (மின்) உந்து கூண்டு : ஒரு ராக்கெட் மின்னோடி அல்லது எஞ்சின்

thrust collar : (எந்) தள்ளு வளையம் : ஒரு தண்டின் மீது படிகிற அல்லது அதனுடன் இணைக்கப்பட்ட வளையம். தண்டு அல்லது அதன்மீது பொருத்தப்பட்ட பகுதிகளின் இயக்க விளைவுகளைக் குறைப்பது அல்லது தாங்கிக் கொள்வது இந்த வளையத்தை அமைப்பதன் நோக்கம்

'thumb nut : (எந்) திருகுமரை: கட்டைவிரலாலும், ஆள்காட்டி விரலாலும் இயக்க முடிகிற திருகுமரை

thumb plane : (மர.வே.) சிறு இழைப்புளி : (இழைப்புளி) 10 அல்லது 13செ.மீ. நீளம் உள்ள சிறிய இழைப்புளி. ஓர் அங்குல _ அகலமுள்ள இழைப்புத் துண்டு கொண்டது

thumb screw : (எந்) நக திருகாணி: கட்டை விரல் நகத்தை பயன்படுத்தி திருகிவிடக் கூடியத் திருகாணி

thumb tack : அழுத்து ஆணி; அகன்ற தலை கொண்ட கூரான முனை கொண்ட ஆணி. வரைபடக் காகிதம் நகராமல் இருக்க அதன் ஓரங்களில் பொருத்திவைக்க வரைபடக்காரர்கள் பயன்படுத்துவது

thurm : செங்குத்தான சதுரக் கட்டைகள், பலகைகளில் ரம்பத்தைக் கொண்டு அறுப்பது, கடைசலில் தோன்றுவது போன்ற பாணிகளை உண்டாக்குவது