பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/630

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

628

தேவையான தகவல்கள் இடம் பெற்றிருக்கும்

title page: (அச்சு) தலைப்புப் பக்கம்: ஒரு புத்தகத்தின் துவக்கத்தில் புத்தகத் தலைப்பு, நூலாசிரியர் பெயர். வெளியிட்டவரின் பெயர் முதலியவை அடங்கிய பக்கம்

T joint: T இணைப்பு: ஒன்றுக்கொன்று செங்கோணத்தில் அமையும் வகையில் இரு இரும்புத் துண்டுகளை இணைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பற்ற வைக்கப்பட்ட ஒருவகை இணைப்பு (குழாய் வேலை). சாதாரண 3 வழி குழாய் இணைப்பு மேலும் கீழுமாக உள்ள நீண்ட குழாயில் தடுப்புறத்திலிருந்து இந்த இரண்டுக்கும் செங்கோணத்தில் மூன்றாவது குழாய் அமைந்திருக்கும்

titration control: (மின்) இணைமக் கூறளவுமானி: வேதியியல் செய்முறைகளில் கரைசல்களின் அமிலத் தன்மையை அல்லது காரத் தன்மையை அளவிடுவதற்கும் கட்டுப்படுத்து வதற்கும் பயன்படும் ஒரு வகை மின்னணுவியல் சாதனம்

T.N. T. Trinitrotoluol : (வேதி) TNT, டிரா நைட்ரோடோலுவேரல் (C7H3(NO2)3) நிறமற்ற நீர்ம ஹைட்ரோ கார்பனான டோலு வோலுடன் நைட்ரேட் சேர்ப்பு மூலம் உருவாக்கப்படும் வெடிப்பொருள் உருகுநிலை 30 டிகிரி சென்டிகிரேட். இந்த வெடிப் பொருள்,அதிர்ச்சு மூலம் தீப்பற்றுவுதல்ல. எனவே ஒப்புநோக்குகையில் கையாள்வதற்கு ஓரளவுப் பாதுகாப்பானது

tobin bronze: (உலோ) டோபின் வெண்கலம்: தாமிரம், துத்தநாகம், ஈயம், இரும்பு, காரீயம் ஆகியவை கலந்த ஒரு கலோகத்தின் வணிகப் பெயர். மிகுந்த இழு வலிமை கொண்டது. உப்பு நீரின் அரிமானத்தை நன்கு தாங்கி நிற்பது. எனவே கப்பலின் இணைப்புப் பகுதிகளைச் செய்வதற்குப் பயன்படுத்தப்படுவது

toe: (உலோ; வே.) விளிம்போரம்: ஒரு தண்டின் விளிம்பு ஓரம்

toe-in: (தானி) முன்புறப் பொருத்து: மோட்டார் வாகனத்தில் முன்புறச் சக்கரங்களைப் பொருத்துவது தொடர்பானது. பின்புறச் சக்கரங்களைவிட முன் புறச் சக்கரங்கள் 3.முதல்,6 செ.மீ. குல அளவுக்கு நெருக்கமாக இருக்கும். முன் ட்யர் தேய்மானத்தை குறைந்தபட்ச அளவுக்குக்குறைக்க இது தேவை. தவிர வண்டியை ஓட்டிச்செல்வது இதன்மூலம் சுலப மாகும். கார் வேகமாகச் செல்கையில் சக்கரங்கரங்கள் அகன்று அமைய முற்படும். முன்புறப் பொருத்து இதை சமப்படுத்துவதாக இருக்கும்

toeing (மர.வே.) ஓரச்செலுத்து: ஒரு பலகையை மற்றொன்றுடன் இணைப்பதற்காக அப்பலகையின் ஒரு ஓரத்துக்கு அருகே ஆணிகளை சாயவாக அடிததல்

toenailing : (மர.வே) பலகை மூலைச் சாய்வாணி ;சாய்வு செலுத்து: ஆணிகளின் தலை வெளியே நீட்டியிராத வகையில் ஆணிகளை சாய்வாக அடித்தல்.தரை அமைப்பதற்கு பலகைகளைப் பொருத்துவதற்கு செய்வதைப் போல

toe switch:(தானி.) மிதிமின்விசை: காரின் உட்புறத்தில் தரை போர்டில் அமைக்கப்பட்ட சுவிட்ச், காலால் மிதித்து அமுக்கினால் ஸ்டார்ட்டர் செயல்படும்