பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/638

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

636

உறுப்பகளாகும். இவை சாதாரணமாக வீட்டு மின்னோட்டத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் சிறிய மின்கலத்தொகுதி களாக இருக்கும். இந்த வகை வானொலிக்கும் குறைந்த அளவே மின்விசை தேவைப்படுவதால், மின்கலங்கள் நெடுநாட்கள் வேலை செய்யும். இவை அளவில் சிறியதாக இருப்பதால் இந்த வானொலிகளை மிகச் சிறியதாகக் கையடக்க அளவிலும் தயாரிக்க முடிகிறது

transit : கோண நிலை அளவீட்டுக் கருவி : இக்கருவியானது (1) பார்ப்பதற்கு தொலைநோக்கி, (2) அளவுகள் குறிக்கப்பட்ட வில்கள். கிடைமட்ட செங்குத்துக் கோணங்களை அளப்பதற்கு ஒரு வெர்னியர், (3) சமநிலை மட்ட்ம் (4) சம நிலைப்படுத்தும் ஸ்குருக் களுடன் ஒரு முக்காலி ஆகியவை அடங்கியது. (சர்வே) கோணங்களை அளக்கவும், பேரிங்குகளை நிர்ணயிக்கவும் சம நிலை காணவும் சர்வேயர்களும் என்ஜினியர்களும் பயன்படுத்தும் கருவி

transite : (உலோ) டிரான்சிட்ஸ் : கல்நார் இழையையும், போட்லண்ட் சிமென்டையும் நன்கு கலந்து மிகுந்த அழுத்தத்தில் செலுத்தி அச்சுகளை உருவாக்குதல். இது வணிகப் பெயர் இவ் விதம் உருவாக்கப்பட்ட பொருள் தீப்பிடிக்காத சுவர்கள் கூரை ஆகியவற்றைத் தயாரிக்கவும் அடுப்பு சூளைக்குள் உள்பரப்புப் பூச்சாகவும் பயன்படுத்தப்படுகிறது

transit time : (மின்) கடப்பு நேரம் : ஓர் எலெக்ட்ரான் குழலில் எதிர்முனையிலிருந்து தகட்டுக்குச் செல்வதற்கு எலெக்ட்ரான் கள் எடுத்துக் கொள்ளும் நேரம்

transition strip : (வானூ) விமான ஓரப் பாதை : விமான நிலையத்தில் ஓடு பாதை அல்லது இதர கெட்டிக்கப்பட்ட பரப்புக்கு அருகே உள்ள விமான இறங்கு வட்டாரத்தின் ஒரு பகுதி. இது உடைத்த கற்கள் அல்ல்து வேறு தகுந்த பொருட்களால் கெட்டிக்கப்பட்டது. விமானம் பத்திரமாக இறங்கவும் ஓடுபாதையில் அல்லது மேற்படி ஒரப்பகுதியில் எந்தத் திசையிலும் தரையில் ஓடவும் இப்பாதை உதவும்

transit man : டிரான்சிட் உதவியாளர் : சர்வேயர் அல்லது என்ஜினியர் பயன்படுத்துகிற டிரான் சிட் கருவியைக் கையாளுபவர். அவர் ஒரு பட்டதாரி என்ஜினியராக இருக்கத் தேவையில்லை

transitron : (மின்.) டிரான்சிட்ரான் : ஓர் ஊடுரு ஊசலியில் திரைக்கும் அடக்கி வலைகளுக்கு மிடையில் வைக்கப்படும் படிகம்

translucent: ஒளிக்கசிவு : ஓரளவு ஒளி ஊடுருவுகிற (காகிதத் தாயரிப்பு) பளபளப்பான நேர்த்தி கொண்ட, பூச்சு உள்ள அட்டை

translunar space: (விண்.) நிலவுக்கு அப்பாற்பட்ட விண்வெளி: பூமியைச் சுற்றும் சந்திரனின் சுற்றுப்பாதையில் தாழ்ந்த வரம்புத் தொலைவில் பூமியை மையமாகக்கொண்ட ஒரு கோளப் படுகையாக உருவகிக்கப்பட்டுள்ள ஒரு பகுதி. இது சந்திரனுக்கு அப்பால் பல்லாயிரம் மைல்கள் பரப்புள்ளது

transmission: (தானி) செலுத்தீடு: மோட்டார் வாகனத்தின் பின் பகுதியில் உறுப்புப் பெட்டிக்குள் கியர்கள் அமைந்துள்ள ஏற்பாட்டைக் குறிப்பது. இதில் ஏற்படுகிற மாறுதல்களின் விளைவாக வேக விகிதத்தில் மாற்றம், முன் புறத்தை நோக்கி இயக்கம் ஆகியவை சாத்தியமாகின்றன