பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/643

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
641

மின் கம்பியிலிருந்து மின்சாரம் பெறுவதற்கு ஒரு தண்டின் மேல் நுனியில் மின் கம்பிமீது உட்காரும் வகையில் சிறு சக்கரம் இருக்கும் அல்லது வழுக்கிச் செல்லும் தொடு சாதனம் இருக்கும். (எந்திர) சங்கிலியைப் பயன்படுத்தி பாரத்தைத் தூக்குவதற்கான சக்கர வடிவிலான தாங்கு பகுதி. இது ஒரு நீண்ட உலோகத் தண்டும்து நகர்ந்து செல்லக்கூடியது

troostite : (உலோ.) டிரூஸ் டைட்டு: மார்ட்டென்சைட் என்ற எஃகின் கடினத் தன்மைக்குக் குறைவான கடினத்தன்மையுள்ள எஃகின் இடைமாறு நிலைக் கட்டமைப்புத் தனிமம்

troposphere: (மின்.) அடிவளி மண்டலம் : பூமியின் வாயுமண்டலத்தின் அடிப்பகுதி. இதில் மேகங்கள் உருவாகின்றன. உயரே செல்லச் செல்ல வெப்ப நிலை குறைகிறது

trouble lamp : (மின்) சங்கட விளக்கு: மிக நீண்ட மின் கம்பியின் நுனியில் பல்பு பொருத்தப்பட்ட விளக்கு. பழுது பார்க்கும் போது அவ்விடத்துக்கு ஒளி கிடைக்க உதவுவது

trowel : (வார்ப்.) கரணை : வார்ப்பட ஆலைக்கரணைகள் சிறியவை; குறுகலானவை. பொதுவில் இவை சுமார் 3.8 செ.மீ. அகலமும் 12 அல்லது 15 செ.மீ. நீளமும் உள்ளவை

troy weight :டிராய் எடை; அளவு முறைப்படி ஒரு ராத்தல் என்பது 12 அவுன்ஸ். பொற் கொல்லர்களும், நகைக் கடைக்காரர்களும் பயன்படுத்தும் எடைமுறை. 24 கிரெய்ன் = 1 பென்னி வெயிட் 20 பென்னி வெய்ட்

வெயிட் = 1 அவுன்ஸ்

12 அவுன்ஸ் = 1 பவுண்டு

true power : (மின்.) மெய்விசை: ஒரு மின்சுற்றுவழியில் உள்ள படிக்கு ஈர்த்துக் கொள்ளப்படும் மின்விசையின் அளவு

true air speed meter : (வானூ) விமான அசல் வேகமானி: இது ஒரு வகையான காற்று வேகமானி, இது காற்றின் வேகத்தையும் கணக்கில் கொண்டு விமானத்தின் உண்மையான வேகத்தையும் கண்டறிந்து கூறுவது

trunk : (மின்.) மைய ஊடுருளை: மின்விசைப் பலகைகளுக்கும் தொலைபேசித் தொடர்பகங்களுக்கு மிடையில் கம்பிகளையும் கம்பிவடங்களையும் இடையிணைப்பு செய்யும் ஊடுருளை

trunnion சாய்வு புயங்கள் : நீண்ட குழல் அல்லது தண்டின் நடுப்பகுதியில் இரு புறங்களிலும் நீட்டிக் கொண்டிருக்கிற புயங்கள். இவற்றைத் தாங்குதூண்கள் மீது அமைத்தால் குழலை அல்லது தண்டை மேலும் கீழுமாகத் தக்க படி சாய்த்து அமைக்க முடியும்

truss : (க.க.) மூட்டு: கட்டடத்தில் நீண்ட இடைவெளிகளுக்கு நடுவே பாரத்தைத் தாங்குவதற்காக அமைக்கப்படுகிற முன்கூட்டி இணைக்கப்பட்ட முக்கோண வடிவ கட்டுமானப் பகுதிகள், இருக்கைகளில் இரு ஓரங்களைத் தாங்குவதற்குப் பயன்படுத்தப்படும் உறுதியான சட்டங்கள். பொதுவில் இவை ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கும்

trussed axle : (தானி) முட்டுத் தண்டு: முட்டுத் தண்டு மூலம் உறுதியேற்றப்பட்ட அச்சு

trussed beam : (க.க.) முட்டுக் கம்பி மூலம் வலுவேற்றப்பட்ட நீண்ட தண்டு