பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/680

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

678

களைக் கண்டறிவதற்கென குறியீடுகளையும், அளவு எண்களையும், கம்பி, தகடு ஆகியவற்றை வைத்து அளவு பார்க்க வெவ்வேறு அளவுகளில் குழிவுகளையும் கொண்ட தகடு. அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிற அமெரிக்கா தர நிர்ணய உருக்கு கம்பி அளவு மானி அதிகார முறையில் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் சட்ட மதிப்பு இல்லாதது. வரி விதிப்புப் பணிகளுக்கு பிர்மிங்ஹாம் அளவுமானி அமெரிக்க சட்டமன்றத் தால் அங்கீகரிக்கப்பட்ட்து ஆகும். அமெரிக்கன் பிரவுன் அண்ட் ஷார்ப் காஜ், தாமிரக் கம்பிகளையும், இரும்பல்லாத உலோகங்களால் ஆன கம்பிகளையும் அளக்கப் பயன்படுகின்றன

wire glass: (க.க.) கம்பி பதித்த கண்ணாடி : அகன்ற இடைவெளி கொண்ட கம்பி வலை உள்ளே புதிக்கப்பட்ட கண்ணாடி. தற்செயலாகக் கண்ணாடி உடைந்தாலும் துண்டுகள் சிதறாமல் தடுக்க இந்த ஏற்பாடு உதவும்

wire mark: கம்பிக் குறி : காகிதம் மீது ஃபோர்ட்ரீனியர் எந்திரத்தின் கம்பி அல்லது உருளை எந்திரத்தின் உறை ஏற்படுத்தும் அடையாளக்குறி

wire nails: கம்பி ஆணிகள்: கம்பிகளிலிருந்து செய்யப்படுகிற ஆணிகள் பல்வேறு காரியங்களுக்கு ஏற்ப, பல அளவுகளில் பல விதமான தலைகளுடன் தயாரிக்கப்படுபவை. முன்னர் இருந்த வெட்டு ஆணிகளுக்குப் பதில் இவை பரவலாகப் பயன்படுபவை

wirh recorder (மின்.) கம்பி ஒலிப்பதிவுக் கருவி: ஓர் ஒலிப்பதிவு சாதனமாக ஒரு காந்தக் கம்பியைப் பயன்படுத்தும் ஓர் ஒலிப் பதிவுக் கருவி

wire worm (உயி) கம்பி புழு: புல்லுக்கு அடியில் வாழும் ஒரு ஆண்டின் முட்டைப்புழு. புல் நிலத்தை உழும் பொழுது இந்த்க் கம்பிப்புழுக்கள் வெளியே வந்து பயிர்களுக்குப் பெருஞ்சேதம் விளைவிக்கிறது

wiring diagram : (மின்.) கம்பித் தொடர் வரைபடம் : மின் தொடர்புச் சாதனங்களையும், அவற்றுக் கிடையிலான இணைப்புகளையும் குறியீடுகள் மூலம் காட்டுகிற வரைபடம்

withe : (க.க.) வித் : அதே புகைக் குழாயில் புகை வழிகளுக்கு இடையில் அமைந்த பகுதி

wolframite : (உலோ) வோல்ஃப் ராமைட் : அலுமினியம், டங்ஸ்டன், மற்றும் சிறு அளவில் தாமிரம், துத்தம் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிற ஜெர்மன் அலோகம். இது டுராலுமினியத்தின் பல பண்புகளைப் பெற்றுள்ளது

wood alcohol (வேதி.) மர ஆல்கஹால் : காண்க மெதனால்

woodcut : (அச்சு.) மரச் செதுக்கு அச்சு : அச்சடிப்பதற்கு மரக் கட்டையால் செய்யப்படுகிற பிளேட். இதில் தேவையில்லாத பின்னணி செதுக்கி அகற்றப்படும். அச்சிடப்பட வேண்டியவை புடைப்பாக நிற்கும்

wood engraving : (அச்சு.) மர செதுக்கு வேலை : மரச்செதுக்கு அச்சுகளைத் தயாரிக்கும் அலை

wood finishing : (மர.வே.) மர நேர்த்தி : மரப்பொருட்களுக்கு இறுதி நேர்த்தி அளிக்க இவற்ன்றத் தயார்படுத்துவது, பின்னர் பெயின்ட் அல்லது வார்னிஷ் கொடுப்பது குறிப்பிட்ட நேர்த்தி தேவைப்பட்டால் பாலிஷ் அளிப்பது