பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77

றுக்கு மெருகூட்டுவதற்குப் பயன்படுகிறது

bancatin : பங்க்கா வெள்ளியம் : இது ஓர் உயர்தரமான வெள்ளீயம், இது மலாக்காவிலும் பங்க்காவிலும் கிடைக்கிறது

band (க.க.) வண்ணக்கரைப்பட்டை :

(1) ஒரு கட்டிடத்தின் கோபுரத்தை அல்லது பிற பகுதிகளைச் சுற்றியுள்ள தளமட்டமான அகன்ற பட்டையுள்ள சிற்பம் அல்லது சிற்பத் தொகுதி. இதன் மேற்பகுதியிலும், கீழ் விளிம்புகளிலும் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்

(2) அறைகலன்களின் மேற்பரப்புக்கு மெருகூட்டுவதற்கு வண்ணத்தில் அல்லது அரிமணிகளில் புட்டையாக அமைக்கப்படும் சுற்று வரிப்பட்டை

(3) புத்தகக் கட்டுமானத்தில், புத்தகத்தின் முதுகுப் பகுதியிலுள்ள மூட்டு வார்

banding : (க.க.) (அச்சு.) (மர.வே.) வண்ணக்கரைப் பட்டையிடுதல் : வண்ணக்கரைப் பட்டை அல்லது சுற்று வரிப்பட்டை மூலம் அலங்காரம் செய்தல்

band iron : சிப்பத்தகடு : கப்பலில் கொண்டு செல்லும் சிப்பங்களைப் பாதுகாப்பதற்குப் பயன்படுத்தப்படும் மெல்லிய இரும்புத் தகடு

band saw : வட்டப்பல் வாள் : போன்று அறுப்பதற்குரிய பற்களிணைந்த வட்டச் சங்கிலி, இது கப்பித் தொகுதிகளின் மேல் இடி மரங்களை வெட்டும்

band switching : (மின்.) பட்டைமின் இணைப்பு விசைவானொலிப் பெட்டியின் ஏற்பு அலை வெண் வீச்சினை மாற்றிக் கொள்ளக் கூடிய மின் இணைப்புவிசை

band twisting : (பட்.) பட்டைத்திருக்கு : வட்டப்பல் வாளினைச் சுருட்டி மடக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள நூதனத் திருக்கு மறுக்கம்

bandwidth : பட்டை அகலம் : தொலைக்காட்சியில் கண் அல்லது செவிப்புலன் சைகைகளை அனுப்புவதற்குத் தேவைப்படும் அதிர்வுப் பட்டையில் ஒரு வினாடியில் சுழற்சிகளின் எண்ணிக்கை. தற்போது தொலைக்காட்சியில் ஆறு மெகா சைக்கிள் அகலமுள்ள அலை வரிசைகளில் ஒளி-ஒலிச் சைகைகள் அனுப்பப்படுகின்றன

bandy leg : வளைகால் : கலன்களில் வளைகாலுள்ள அல்லது கோணற்காலுள்ள அறை கலன் தட்டுமுட்டுப் பொருள்களின் வளைகால் பாணி

banister : கைப்பிடி : படிக்கட்டுக் கைப்பிடிக் கம்பித் தொகுதி

banister back : கைப்பிடி மேற்புறம் : கைப்பிடிபோல் அமைக்கப்பட்டுள்ள, நாற்காலியின் சாய் பகுதி போன்ற மேற்பகுதி

bank: (வானூ.) ஒரு புறச்சாய்வு : (1) விமானத்தைத் திருப்புவதற்காக அல்லது அதன் திசையை மாற்றுவதற்காக அதனைப் பக்க வாட்டில் ஒருபுறமாகச் சாய்த்தல். வலப்புறச்சாய்வுக்கு விமானத்தின் வலது இறகு கீழே இறக்கப்படும்

banker : அடைகல் : மணிக்கற்களில் வேலப்பாடுகள் செய்வதற்குப் பொற்கொல்லர்கள் பயன்படுத்தும் அடைகல்

banking transformers : (மின்.) மின்மாற்றித் தொகுதி : மின்மாற்றிகளை ஒரு தொகுதிகளாக ஒருங்கு சேர்த்து வைத்தல்

bank of lamps : (மின்.) விளக்குத் தொகுதி : ஒரே அடித்தளத்தின்