பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

578

களத்தில், தரையிறங்கும் வட்டாரத்திலிருந்து அல்லது அந்த வட்டாரத்துக்கு விமானம் ஓடுவதற்கென சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட தரை .

T bolt (எந்.) 'T' வடிவ செருகு ஊசி: ஆங்கில 'T' எழுத்து போன்ற வடிவம் கொண்ட போல்ட். அதன் தலைப்பகுதியானது கடைசல் எந்திர அல்லது இழைப்பு எந்திர மேடை போன்றவற்றின் T துளைகளில் படிமான மாகப் பொருத்துவது.

Teak (மர.வே.) தேக்கு: கிழக்கு இந்தியாவில் காணப்படுகிற பெரிய வடிவிலான மரம். இதன் மரக் கட்டை மிக நீடித்து உழைக்கக் கூடியது. கப்பல் கட்டுமானத்துக்கும் இருக்கைச் சாதனங்கள் செய்யவும் மிகவும் விரும்பப்படுவது.

Tears: கிழிதல்: தொலைக்காட்சித் திரையில் ஓசை காரணமாக கிடை மட்டமாக ஏற்படுகிற பாதிப்பு, படம் கிழிவது போன்று தோன்றும்.

Technical: தொழில் நுட்பம்: குறிப்பிட்டதொரு கலை, அறிவியல் பிரிவு, வேலை, தொழில் போன்றவை தொடர்பான தொழில் நுட்பப் பள்ளி, தொழில் நுட்பச் சொல் போன்றது.

Technical director: தொழில் நுட்ப இயக்குநர்: ஒரு ஸ்டுடியோவில் தொழில் நுட்பக்கருவிகள், ஊழியர்களை மேற்பார்வையிடுவர்.

Technology: தொழில் நுட்பவியல்

தொழில் துறைக் கலைகள் சம்பந்தப்பட்ட அறிவியல் துறை.

Tee: இணைப்பி: (குழாய்) வெவ் வேறு குறுக் களவுள்ள குழாய்களைப் பொருத்துவதற்கான இணைப்பி, அல்லது குழாயின் ஒட்டத் திசையை மாற்றுவதற்கான இணைப்பி. மாட்டுத் தலை இணைப்பியில் நுழைவாயை விடத் திறப்பு வாய் பெரிதாக இருக்கும். நேர் இணைப்பியில் இரு வாய் களும் சம அளவில் இருக்கும்.

Telecast: தொலைக்காட்சி ஒளி பரப்பு: தொலைக்காட்சி நிகழ்ச்சி அல்லது தொலைக்காட்சி ஒளி பரப்பு.

Telecommunication: தொலைத் தொடர்பு: தொலைப் போக்குவரத்து, தந்தி, கடவடி வடக்கம்பி கம்பியில்லாத் தந்தி-தொலைபேசி முதலியன வழியாகத் தொலைச் செய்தி அறிவிப்பு முறை.

Telecon: வானொலித் தொலைமுறை அமைவு: வானொலி-தந்தி வட இணைப்பு மூலமாகத் தொலைக்காட்சித் திரையில் செய்தி ஒளியிட்டுக் காட்டுவதன் மூலம் பலர் ஒருங்குகூடி கலந்தாய்வு செய்ய வழிகோலும் அமைவு.

Telegraph: (மின்.) தந்தி: கம்பி வழியே செய்திகளை அனுப்புவதற்கும் பெறுவதற்குமான சாதனம். இதன் வழியே எழுத்துகளைக் குறிக்கின்ற வகையிலான மின் சிக்னல்கள் அனுப்பப்படும்.