பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 அமைக்கப்படும். 2. கடல் மேற்பரப்பில் நிறுவப்படும் நகரங்கள் மக்கள் நெருக்கத்தைக் குறைக்கும். 3. மக்கள் மகிழக் கடலுக்கு அடியில் மனமகிழ் பூங்காக்கள் அமைக்கப்படும். 4. போக்குவரத்துக்குக் கடல் ஊர்திகள் பயன்படும். 5. உணவுக்காகக் கடல்பூண்டுகளும் தாவரங்களும் வளர்க்கப்படும். 6. அலைகளிலிருந்து ஆற்றல் உற்பத்தி செய்யப்படும். 7. நன்னிருக்காகவும் பனிக்கட்டிக்காகவும் நீண்ட தொலைவுகளுக்குப் பனிப்பாறைகள் நீரில் இழுத்துச் செல்லப்படும். 8. வானிலையைக் கண்காணிக்கவும் அதனை முன்னறிவிக்கவும் திருத்தவும் கடல் பயன்படும். 15. மண்ணும் மரமும் மண் என்பது என்ன? மண் என்பது ஒரு கலவையாகும். இதில் பாறைத் துகள்கள், நுண்ணுயிரிகள், மடிந்த தாவர விலங்குப் பொருள்கள், காற்று, நீர் ஆகியவை உள்ளன. மண் பக்கத் தோற்றத்தின் மூவகை அடிப்படைப் பிரிவுகள் யாவை? 1. உண்மையான மண் 2. அடிமண் 3. அடிப்பாறை. மண் உண்டாவதற்குரிய காரணங்கள் யாவை? 1. காலநிலை 2. நிலத்தோற்றம் 3. உயிரினங்கள் 4. காலம் 5. சிதைந்த பாறைத் துகள்களின் தன்மை. மண் வகைகள் யாவை?