பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. 27. 28. 29. 50. 51. 32. 24 8. கடலியல் - பெருங்கடல்களையும் துணைக் கடல்களையும் ஆராய்வது. வரலாற்றுப் புவி அமைப்பியல் என்றால் என்ன? புவி உருவான வகையையும் அதிலுள்ள மக்களையும் ஆராய்வது. இதிலுள்ள பிரிவுகள் யாவை? 1. அடுக்கு வரைவியல் - பாறை அடுக்குகளை ஆராய்வது. 2. தொல்புவி அமைப்பு இயல் - தொல்கால தாவரங்களையும் விலங்குகளையும் ஆராய்வது. 3. புவிக்காலவியல் - காலத்தை ஆராய்தல். 4. தொல்காலநிலை இயல் - தொல் தட்ப வெப்ப நிலைகளை ஆராய்வது. 5. தொல் காந்தவியல் - பழம்பாறைகளின் காந்தப் புலங்களை ஆராய்வது. 6. தொல் புவி அமைப்பியல் - இயற்கைப் புவி இயல். 7. நுண்தொல்லுயிரி இயல் - சிறிய தொல் வடிவங் களை ஆராய்வது. புவிக் கடிகாரம் எவ்வாறு உருவாயிற்று? கதிரியக்கப் பொருள்கள், அவற்றின் அழிவு ஆகியவை நீண்ட காலம் எதிர்பார்த்து கொண்டிருந்த புவிக் கடிகாரம் உருவாக வாய்ப்பளித்தன. புவிக்கடிகாரம் என்றால் என்ன? புவியின் வயதை உறுதி செய்யும் கடிகாரம். இதன் படி புவியின் வயது 4.6 பில்லியன் ஆண்டுகள். கரிக்காலக் கணிப்பு என்றால் என்ன? தொல் பொருள்களின் வயதை கரி-14 அடிப்படையில் உறுதி செய்யும் முறை. கரி-14 என்பது ஒரு சுவடு அறியும் தனிமம் ஆகும். தொல்பொருள் காலக் கணிப்பு நுணுக்கத்தைக் கண்டறிந்த தற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்? வில்லார் பிராங்க் லிபி.1960இல் நோபல் பரிசு பெற்றார். காலக்கணிப்பு நுணுக்கங்கள் என்றால் என்ன? தொல்லுயிர்ப் படிவங்கள், தொல்பொருள் படிவங்கள்,