பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. 42. 45. 26 1. புவி அமைப்பியல் சிந்தனையில் ஒரு புரட்சியை உண் டாக்கி, புவி அமைப்பியல் ஆராய்ச்சியை ஊக்கு வித்தது. 2. இக்கொள்கை கடல் புவியமைப்பியலில் உயர் ஆராய்ச்சி நடைபெற வாய்ப்பளித்துள்ளது. கடல் வடி நிலங்களை ஆராயவும் வழிவகுத்துள்ளது. புவி அமைப்பியலில் பயன்படும் கருவிகள் யாவை? 1. ஈர்ப்புமானி 2. ஈர்ப்பு ஊசல் 3. சாய்மானி 4. காந்தமானி 5. நிலநடுக்கமானி 6. பாறை வரைவி 7. மின்னணு நுண்ணோக்கி 8. நிறை நிறமாலைமானி 9. கணிப்பொறி புவி அமைப்பியல் தொடர்புள்ள அடிப்படை அறிவியல் யாவை? 1. கணக்கு - புள்ளி இயல் முறை 2. வேதியில் - பாறைகளின் இயைபை அறிதல் 3. உயிரியல் - தொல்லுயிர்களான தாவரங்களையும் விலங்குகளையும் அறியப் பயன்படுதல் 4. இயற்பியல் - புவியைப் பாதிக்கும் பல இயற்கை ஆற்றல்களையும் அவற்றைப் புவி சமாளிப்பதையும் விளக்குவது. வானவியலோடு அதற்குள்ள தொடர்பு யாது? வானியல் ஆராய்ச்சி முடிவுகள் புவி விண்ணகத்தில் எவ்வாறு பொருந்தியமைகின்றன என்பதை விளக்குகிறது.