பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6. ஆட்சி முறையும் மக்கள் வாழ்க்கையும்

அசோகரது பேரரசைப் போன்ற விரிந்த எல்லைகளுடைய பேரரசு இந்தியாவில் எக்காலத்தும் ஏற்பட்டதில்லை. இக்காலத்திலுள்ள ஆப்கானிஸ்தானம், பலுசிஸ்தானம், சிந்து, கச்சு, காஷ்மீர், நேப்பாளம், தமிழகம் நீங்கலாக மற்ற இந்தியா முழுதும் அந்தப் பேரரசுக்குள் அடங்கியிருந்தன. திபெத்து நாட்டில் ஒரு பகுதியும், அசோகர் ஆட்சிக்கு உட்பட்டதாகவும், அவர் அந்நாட்டிற்கும் எழுந்தருளியிருந்ததாகவும் அந்நாட்டுக் கதைகள் கூறுகின்றன. அஸாம் மட்டும் தனி அரசாக இருந்து வந்தது.

பேரரசு முழுதும் பெருவேந்தரின் ஆட்சியிலேயே இருந்தது. அவருக்கு மேல் எவரும் இல்லாத நிலையில், முடிவான அதிகாரங்கள் அனைத்தும் அவரிடமிருந்தன. ஆகவே தோற்றத்திற்கு அவர் சர்வாதிகாரியாயிருந்தார். ஆனால் நடைமுறையில் இந்தியாவில் அப்படி இருப்பதற்கில்லை. பேரரசரும் அறநூல் நெறிகளுக்குக் கட்டுப்பட்டவர். இக்காலத்து முறைப்படி சட்டங்கள் பல்லா-