பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7. அசோகரின் அருங்குணங்கள்

இந்திய வரலாற்றிலேயே அசோகரின் காலம் பொன்னேட்டில் எழுதத் தக்க பெருமையுடையதாகும். நம் தாயகத்தின் தவச் செல்வமாய் விளங்கிய மனித குலமாணிக்கம் ஜவகர்லால் நேரு அவர்கள் பேரரசர் அசோகரின் புகழ் நிரம்பிய வரலாற்றை இந்தியவரலாற்றின் புகழ் மண்டிய பகுதி என்று சுட்டிக்காட்டியுள்ளார். ‘எல்லாரும் இந்நாட்டு மன்னர்’ என்னும் குடியரசுக் கொள்கையை மேற் கொண்ட ஜவகர் அசோகரின் கொள்கைகளையும் செயல்களையும் பாராட்டியுள்ளார். அசோகர் பேரரசராக இருந்தும் மனிதப்பண்பு நிரம்பியவராக இருந்ததால் முடிமன்னரை வெறுக்கும் ஜவகர் அசோகரிடம் மட்டும் பெருமதிப்புக் கொண்டிருந்தார்.

நல்லரசர் ஒருவருக்கு வேண்டிய அருங்குணங்கள் யாவும் அசோகரிடம் ஒருங்கே பொருந்தி இருந்தன.

“அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு”

என்னும் வள்ளுவர் வாய்மொழிக்கிணங்க, அச்சமில்லாமை, கொடுக்கும் தன்மை, அறிவுடைமை, ஊக்கமுடைமை ஆகிய நான்கு குணங்களும்