பக்கம்:அலைகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122 O லா. ச. ராமாமிருதம்

 எதற்கும் திறப்பது அந்த நெற்றிக் கண்தான். அது, அவனுடைய தோல்வியற்ற வெற்றியின் சின்னம்.

ஆகையால், அவன் அவளைச் சுட்டெரித்தான்.

கல்லையே வெல்லப் பாகாய் உருக்கிய, அந்தக் கண்ணின் வீட்சண்யத்துக்கு மாந்தளிர் போன்ற அவளது சரீரம் எம்மாத்திரம்? இமைப் பொழுதில் அவள் விழுந்த இடத்தில், ஒரு சாம்பற் குவியல் கிடந்தது. அதில் விழுந்து புரண்டு எழுந்தான் பெருமான். அவனுடைய கண்களினின்று, இரண்டு எரி நீர்த்துளிகள் கிளம்பி, கன்னத்தில் வழிந்து, முகவாய்க் கட்டையினின்று உதிர்ந்து, கீழே விழுந்து புகைந்து, தீ காட்டைப் பற்றியது.

ஸ்னானத்துக்குச் சென்ற மங்களமுகி வேய்ங்காட்டுத் தீயில் மறைந்தாள் என்று வதந்தி சொல்லிற்று.

***

[பூர்வ கதையில், பகவானானவர், பவித்திரனான தம்மைப் பழித்துக்கொண்டு, ஆணவம் பிடித்தலையும் தாருகா வனத்து ரிஷிகளை, அவர்களுடைய மனைவிமாரின் கற்பையழித்துப் பங்கப் படுத்தி, அவர்களின் செருக்கை அடக்கி, பிறகு அவர்களை ஆட்கொண்டார். ஓம்......']


☐☐☐
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/124&oldid=1288279" இலிருந்து மீள்விக்கப்பட்டது