பக்கம்:அலைகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாற்று O 133

 அயோத்யா காண்டம். ராமன் வனம் புகும் கட்டம் மகன் காட்டுக்குப் போயே விட்டான் என்ற சேதி கேட்டதும் தசரதன்-ஸார், கைகளை விரித்தபடி நாற்காலியிலிருந்து எழுந்துவிட்டார்-'ராமா! ராமா! ராமா!’

அவ்வளவுதான்.

பஸ்மம் குமுங்கினாற்போல் எங்கள் கண்ணெதிரே குன்றிப்போய், குறுகி மேஜைமீது குப்புறக் கவிழ்ந்து விட்டார். அவரிடமிருந்து எங்களையும் ஊடுருவிய பரவசத்தில் உணர்ச்சி வேகம் என்று நினைத்தோம். சற்று நேரம் பொறுத்து நான்தான் எழுந்து கிட்டப்போய், 'ஸார், ஸார்’ என்று மெதுவாய்க் கூப்பிட்டேன். பதில் இல்லை. தொட்டுப் புரட்டினேன். முகம் துவண்டு சாய்ந்தது. கடைவாயில் எச்சில் வழிந்தது. கண் கண்ணாடியாகிவிட்டது.

மாமி தைரியமாயிருந்தாள் என்றுதான் சொல்ல வேணும்.

தான் கலங்கினால், குழந்தைகள் இடிந்துவிடுமோ எனும் பயம்,

கல்யாணத்துக்குப் பெண் காத்திருக்கிறாள்.

காலேஜில் பையன் படிக்கிறான்.

வளரும் பயிர்கள்.

தன் துயரத்தை மூட்டை கட்டி-இல்லை, அப்படியே விழுங்கிவிட்டு இனி வேண்டியதைக் கவனிக்க ஆரம்பித்தாள். அசல் வீட்டு, எதிர்வீட்டுப் பெண்டிர், ஏன், என்னோடுகூட பேசாத மாமி என்னைக் கூப்பிட்டு, என் தகப்பனாரை அழைத்துவரச் சொன்னாள். இருப்பதற்குள் என் தகப்பனாரை தான் அவள் கணவருக்கு நெருங்கியவர். மாமி அப்பாவுக்குப் பெண்ணாயிருக்க முடியும். சன்னதியிலிட்ட திரை பின்னிருந்து வரும் அசரீரிபோல், கதவின் பின்னிருந்து கேட்கும் மாமியின் அமைதியான குரலும், அனுமார் போல்

அ.-9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/135&oldid=1288523" இலிருந்து மீள்விக்கப்பட்டது