பக்கம்:அலைகள்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"தெறிகள் O 247"


ஆனால், மருமகளுக்குப் பேச வரவில்லை. அத்தையின் தோளில் புதைந்த முகம் நிமிர அஞ்சிற்று. வலது கரம் மாத்திரம் தூக்கிற்று. அதிலிருந்து அறுந்த தாலிச்சரடு பொட்டுடன் தொங்கிற்று.

'ஹா-'

மார்பின்மேல் கவ்விய கையுடன் முகம் மேனோக்கிய நிலையில் என் மனத்தில் விறைத்துவிட்ட அவ்வுருவத்தின் வார்ப்பு இன்னமும் கனவிலும் நினைவிலும் வட்டமிடுகின்றது.

பொல பொலவேனப் பொழுது புலரும் வேளை.

வெள்ளிக்கிழமை

டுத்த வருடம் நான் ஊருக்குச் சென்றபோது அவள் இல்லை. "மஞ்சள் கயிறை மருமகள் கண்டெடுத்துக் கொண்டு வந்து கொடுத்த அன்னிக்கே, அப்பவே, அவளுக்கு பூமிலே வேர் விட்டுப்போச்சுடா! அவமானம் ஒருபக்கம். அந்த நிலை தனக்கு நேர்ந்துவிடுமோ என்கிற திகில் வேறே கண்டூடுத்து-அதனாலேயே கணவனை முந்திக்கத்திடம் பண்ணிண்டூட்டா. பிள்ளையார் மாடத்துக்கெதிரே உறியில் தொங்கும் விபூதிப் பல்லாயிலிருந்து தினம் ஒருகை வாயில் அள்ளி அள்ளிப் போட்டுண்டு, சோகை புடிச்சுப் போச்சு. இங்கே நடக்கிற வைத்தியமும் அப்படி இப்படித்தான்! விஷயம் முற்றிப் போச்சு. ஆனால், உயிரின் எண்ணத்தையே துறந்தவளிடம் சஞ்சீவியே என்ன பண்ண முடியும்?”

அம்மாவின் பேச்சை நின்று கேட்க முடியவில்லை. மூச்சு திணறிற்று. வெளியே வந்தேன்.

எதிர்வீட்டுத் திண்ணையில் முதலியார் உட்கார்ந்திருந்தார்.

யானைக்குழியில் விழுந்துவிட்ட காட்டானையைப் பார்ப்பது போல் பயமாயிருந்தது. மண்பிள்ளையார் முகத்தில் பதித்த குந்துமணிகள் போன்று சிவப்பேறிய கண்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/249&oldid=1286366" இலிருந்து மீள்விக்கப்பட்டது