பக்கம்:அலைகள்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

275 O லா. ச. ராமாமிருதம்


உடல் சருகா நடுங்கிற்று. ஆனால் என்மாரை யழுத்திண்டிருந்த நெஞ்சுச்சுமை குறைய ஆரம்பிக்கிறது.

"அம்மா மன்னிச்சுடு என்னை, எனக்கு ஒண்னும் தெரியல்லே!"

"முட்டாள் முட்டாள்! பெத்திருக்கையே தவிர புத்தி எங்கே போச்சு? நீ பிறந்து வளர்ந்ததிலிருந்து என் பூக்களைச் சூடிண்டு, அப்புறம் எனக்கே பழியைத் தேடி வைக்கணும்னு பாக்கறையா?”

"ஜகதா! ஜகதா!"

அம்மாவின் மிரண்ட குரல் கொல்லைத் தாழ்வாரத்திலிருந்து எங்களை எட்டித்து.

"சரி போ உன் அம்மா கூப்பிடறா! மூஞ்சியைத் துடைச்சுக்கோ! ஆ அப்படி! இனிமேலாவது சமத்தாயிரு. குழந்தையா லக்ஷணமாயிரு, மேதாவியா நினைச்சுண்டுடாதே”

நான் அடிமரத்தைத் தொட்டு கண்ணில் ஒத்திண்டேன். இந்த சமயம் நான் மறக்க முடியாத் சமயம். அது எனக்கே சொந்தமான ரகஸ்ய சமயம் இல்லியா?

“என்னடி ஜகதா எங்கேடி போயிட்டே? இந்த இருட்டிலே தனியா இப்படிப் போவாளா? பூச்சி பொட்டு இருந்து பிடுங்கினா என்னடி பண்ணுவே? நாங்கள் யாருக்கு என்ன பதில் சொல்றது?’’

அம்மாவின் குரலில் அழுகை நடுங்கித்து.

“என்னை எதுவும் ஒண்ணும் பண்ணாதம்மா! :

"நீ என்ன அப்படி வரம் வாங்கிண்டு வந்திருக்கையா?”

நான் சிரிச்சேன். உனக்கு எப்படித் தெரிஞ்சுதோ எனக்குத் தெரியாது. ஆனால் நான் நீ சொன்னபடி தான்!'"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/278&oldid=1287236" இலிருந்து மீள்விக்கப்பட்டது