பக்கம்:அலைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முள் O 89

 "விமலா!"

"........."

"விமலா!"

“ஊ ம்...கூப்பிட்டேளா?’’

“நாம் நாளைக்கு மத்தியான வண்டிக்குக் கிளம்பி விடணும்’ -

"என்ன ?’’

"இதுதான் உங்கள் தீபாவளி வெடியா? கையை விடுங்கோ-’’

'மாட்டேன்'.

"விடுங்கோன்னா விடுங்கோ-’’

'விமலா நான் சொல்வதைக் கேள்...’

"எல்லாம் கேட்டாச்சு. உங்கள் சுண்டுவிரலில் பாகாய்ச் சுற்றி, நீங்கள் இழுக்கும் வழியெல்லாம் நான் இழுபடத் தானா இந்த வாய் ஜாலக் எல்லாம்?”

'விமலா, விடிந்தால் ஸ்நானம் பண்ணி மருந்தை விழுங்கின. பிறகு அடுத்த வருஷம்தானே தீபாவளி!’

“என் கோபத்தை அனாவசியமாய்க் கிளப்பாதேயுங்கள். தீபாவளியை எப்போதிலிருந்து தங்க நிறையாய் நிறுத்தாறது?’’

‘விமலா, நாமே இங்கு வந்திருக்கக் கூடாது.'

"ஏன், யார் உங்களை இங்கே என்ன மரியாதைக் குறைவாய் நடத்தினா? ஆமா, எனக்கும் இப்போத்தான் தோணறது; வந்ததிலிருந்தே நீங்கள் ஒரு தினுசாய்த் தான் இருக்கிறீர்கள். கூப்பிட்டால் காது கேட்கவில்லை. ஊமையடி பட்டாற்போல் தலையைத் தூக்கி முழித்து முழித்துப் பார்க்கிறீர்கள். நீங்கள் ஏன் ஸொரத்தாயில்லை? திகைப் பூண்டு மிதித்து விட்டீர்களா? உடம்பு சரியாயில்லையா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/91&oldid=1288245" இலிருந்து மீள்விக்கப்பட்டது