பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

க. சமுத்திரம் 1.65 வீட்டுக் காகமாக இருக்குமோ. அங்குள்ள ஆண் காக்கா, இந்த காகத்தை சின்ன வீடாய் அல்லது கூடாய் வைத்திருக்குமோ. அல்லது என் வீட்டுக் காகங்கள், இந்த சுற்று வட்டார காக்கைச் சமூகத்திடம் நான் பொல்லாதவன் என்று பொய்ப் பிரச்சாரம் செய்திருக்குமோ. என் பித்துக்குளித்தனத்தை நம்ப வேண்டும். குறைந்தது அரைமணி நேரமாவது, அந்த வளைவு பகுதியில் அங்குமிங்குமாய் போக்கு காட்டி நின்றேன். எந்த வழிப்போக்கரையாவது அந்தக் காகம், என்னைக் குட்டியது மாதிரி ஒரு குட்டுக் குட்டியிருந்தால், நான் மகிழ்ந்து போயிருப்பேன். அரைமணி கடந்து முக்கால் மணி யானாலும், நான் நினைத்தது நடக்க வில்லை. ஒருவேளை இந்தக் காகம், என்னை ஆள் மாறாட்டமாக அடித்திருக்கும் என்றும் நினைத்தேன். அந்த நினைப்பை நிரூபிப்பதற்காக, அந்த வேப்ப மரத்திற்கு முன்னாலும் பின்னாலும் நடந்து நடந்து, வட்டமிட்டேன். வட்டமிட்டு வட்டமிட்டு நடந்தேன். போகும்போது எதுவும் நேரவில்லையென்று திருப்தியோடு திரும்பும் போது, த்லையில் இரண்டு நகக்கால்கள் இறங்குகின்றன. ஊசியை உச்சத்தலையில் பாய்ச்சியது போன்ற வலி. என்றாலும், நான் மாறி மாறி நடக்கிறேன். அந்தக் காகமும் மாறிமாறி தாவித்தாவி அடிக்கிறது. எனக்கும் அதற்கும் ஒரு வைராக்கியப்போட்டி நடக்கிறது. இதில் எனக்கு, ஒருகால் வெட்டு. ஒரு நகக்கீறல். ஒரு இறக்கை அடி. இறுதியில் இந்த மூன்றும் சேர்ந்த மூர்க்கத்தனமான தாக்குதல் கூட்டம் வேடிக்கையாய் திரளப்போன சமயம். போதாக்குறைக்கு டிரக் வண்டியில் படுத்துக் கிடந்த டவுசர்க்காரர் என்னைப் பார்த்துச் சிரிக்கிறார். அவர் சிரித்த சிரிப்பில் நான் பறவை விரோதி மட்டுமல்ல. ஒரு சமூக விரோதி என்பதுமாதிரியான தோரணை. நான் தோல்வியை ஒப்புக் கொண்டு, சிறுமைப்பட்டு, என்னை நானே தாழ்ந்து நோக்கி, வேறு வழியில் திரும்பி நடந்தேன். எந்தக்காக்கையும் அடித்தால் அடிக்கட்டும்