பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 5| நாள் எங்கிறதுல்லாம். நம்மோட செளகரியத்துக்காக வச்சிருக்கிறதுதானே. செளகரியம் இல்லாதவாளுக்கு அதெல்லாம் எதுக்கு? தம்பி செத்த வருஷம் தான் ஞாபகம் வருது. சரி கதைக்கு வரேன்." விசாலம் மாமி கண்களை மூடியபடியே ஆடாது அசையாது கிடந்தாள். எல்லம்மா ஒரு உலுப்பு உலுக்கிய பிறகே கண் திறக்காமல் வாய் திறந்தாள். "தம்பி மகனுக்கு போன வருஷம் கல்யாணம் நடந்துது. அவன் ஆத்துக்காரி வெளில எல்லார்க்கும் நல்லவள். ஆனால் வீட்டுல அவளோட ஆட்டம் மகாமோசம் அவளுக்கு மாமியார் பிடிக்கல. அவளை நோகடிக்க என்னைத் திட்டுவாள். இரண்டு பேருக்கு தண்டச் சாப்பாடுன்னு குதிப்பாள். ஒங்களுக்கு புத்தி இருக்கான்னு என்னைக் கேட்டுக்கொண்டே, மாமியாரை ஒரக்கண்ணால் பார்ப்பாள். சரி. மாமியாரை அவள் நேரடியாய்த் திட்டாமல் இருக்கறதுக்கு. நாம இருக்கோம். நாமும் போயிட்டா. பாவம், தம்பி ஆத்துக்காரி தவிப்பான்னு பொறுத்துண்டேன். ஆனால், ஒருநாள், அந்தப் பொண்ணு 'இந்த வீட்ல ரெண்டு பேருக்குச் தண்டச்சோறு போட முடியாது. ரெண்டுல ஒருத்தர ஒங்க கிராமத்துல. பெரிப்பாகிட்ட அனுப்புங்க. இப்பவே ரெண்டுல ஒண்ணு தெரியணும்னு குதிச்சாள். தம்பி மகன் என்னை நேருக்கு நேரா பாத்தான். வாய் சொல்லத் தயங்கிவதைக் கண்ணு சொல்லிட்டு. சரி. இவாள் என்னோட ஒரப்படியாள நன்னா வெச்சிகட்டுமுன்னு, இன்னைக்கு ராத்திரியோடு ராத்திரியாய் புறப்பட்டேன், நே க்கு எல்லாமே வெறுமையா. இருக்கு. தனியாய் வாழ்ந்து பழக்கமில்ல." எல்லம்மா, விசாலத்தையே உற்றுப் பார்த்தாள். பிறகு தன்னை அறியாமலே அவள் கையைப் பிடித்து ஆற்றுப் படுத்தியும், ஆறுதல் தேடியும் பேசினாள். "அடி ஆத்தே. இந்தச் சின்னஞ் சிறு உடம்புக்குள்ள எம்மாம் பெரிய கதை நடந்திருக்கு ... எப்படியோ நீ