பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அலாடின் விளக்கு

I

நான் சிறுவனா யிருந்தபொழுது பாம ஏழை,

பிச்சை எடுத்தே வயிறு வளர்த்தேன்.

அதனால், எனக்கு நண்பர் எவர் ?

எனக்கு விளையாட்டுப் பொருள் ஏது ?

என்னிடம் இருந்த தெல்லாம்

அலாடின் விளக்கு ஒன்றே !

II

குளிர் மிகுதி - தாங்க முடியாது.

அப்பொழுது நான் என் கற்பனை
விளக்கேற்றுவேன்.

கண்கவரும் கனக மாளிகைகள்

கட்டிக்கொண்டே யிருப்பேன்.

இரவும் கழியும், பனியும் ஒழியும்,

III

இரவு பகலாய் உழைத்தேன்,

ஏகமாய்ச் செல்வம் குவித்தேன்,

எத்தனையோ வெள்ளி விளக்குகள் சேர்த்தேன்.

ஆனால், என் பழைய அலாடின் விளக்கை

யார் தருவார் ?

அதிர்ஷ்டமே ! நீ அளித்த செல்வம்

எதுவாயினும் எடுத்துக்கொள் !

எதை இழக்கவும் வருந்தேன்,

என் கனக மாளிகைகள்தாம் இல்லையே !

மற்றவை எனக்கு எதற்கு ?


ஜே. ஆர். லவல்

10