பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இன்றும் அன்றும்

I

ஐயோ! நான் சிறுவனாய் இருந்த பொழுது

இரவும் பகலும் ஆனந்தம் நிறைந்திருந்தது.

என் தோழர் மகிழ்ந்து அன்பு செய்தனர்.

அந்தக் காலத்தைத் திரும்பிப் பார்த்தால்,

பெருமூச்சு எழுவதும், கண்ணிர் கசிவதும்

வியப்பில்லை.

II

இரும்பு வளையம் சுற்றுவேன்:

இன்பத்துக்கு மேல் இன்பம் தரும் !

பம்பரம் - எத்துணை இன்பப் பொருள் !

ஆனால் , இன்று அந்த இன்பங்கள் எங்கே ?

ஐயோ, இப்பொழுது என் தலையே பம்பரம் -

என் கவலைகளே அதன் கயிறு !

III

என் இன்பங்கள் சிறகை இழந்தன.

நான் பறக்க இயலுமோ ? - விழுவேன் !

அச்சம் ஓங்கும், கனவு கலையும்.

முன்னால், இன்பம் அழைக்குமுன் வருமே !

இன்று அழைத்தால் இரும்பு வளையம்

ஏன் என்று கேட்குமோ ?

15