பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நள்ளிரவில்

I

இரண்டு எளிய சிறுமிகள் -

இன்னும் குழந்தைகளே அவர்கள்

நள்ளிரவில் - நடு வீதிகளில்

பாடித் திரிந்தனர்.

II

கந்தல் உடை - கதிர் வீசும் கண்கள் -

நாணப் பார்வை - கோத்த கைகள்

திரண்ட கன்னங்கள் - சாய்த்த தலைகள் -

பாடித் திரிந்தனர்.

III

கடவுளே அவர்கள் பாடித்திரிந்தனர்

தங்கள் மழலைக் குழவிக் குரலில்!

தேவ கீதம் - காதல் கீதம்

பாடித் திரிந்தனர்.

IV

சத்தமே அறியாத சதுக்கத்தில், ஆரு மில்லாத நெடுந் தெருவில்,

மாலையில் வீடுவரும் மாணவிகள் போல்

பாடித் திரிந்தனர்.

64