பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இக்பால்

எழுந்திடுக!

I

முதலாளி - தொழிலாளியின் இரத்தம் கொண்டு
        இரத்தினம் உண்டாக்குகிறான்.
நிலச்சுவான்-விவசாயியின் வாழ்நாளைப்
        பாழாக்குகிறான்.
அரசன் - வறிஞரை நுகத்தில் மாட்டுகிறான்.
அட்டூழியத்தில் ஆழ்ந்த ஜனங்களோ -
        தூங்குகின்றனர்.

II


ஆசாரியர் மேடைமீது நிற்கிறார்,
        மகன் பாடசாலையில் படிக்கிறான்.
ஒருவர் வயோதிகக் காலத்தில் முட்டாள்.
        மற்றவனோ ? இளமையில் கிழவன் !

73